எங்கே நம் ஒற்றுமை ??? posted bySalai Sheikh Saleem (Dubai)[06 March 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17523
இந்த கடையடைப்பு எதற்காக நடைபெற்றாலும் சரி, ஆனால் இதில் ஒற்றுமையை பறைசாற்ற என்ன இருக்கிறது என்று எனக்கு புரியாத புதிராக உள்ளது.
கடையடைப்பு என்று அறிவிப்பு செய்தவர்களே இல்லை இல்லை என்று மாற்று கருத்து கொண்டு துண்டு பிரசுரம் விநியோகித்த பிறகும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது என்றால் இது ஒற்றுமையின் அடையாளமா அல்லது கேலிக்கூத்தா?
அப்போ கடையடைப்பு யார் நடத்தினார்கள்?
எதற்காக கடையடைப்பு நடைபெற்றது?
மின் வெட்டை மட்டும் கண்டித்து இருந்தால் பாராட்டலாம். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று அங்குள்ள மக்களே அவர்களுக்காகவும் சுற்று வட்டார மக்களின் நலனிற்காகவும் போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் வேளையில், அவர்களுடைய உணர்வையும் நாம் மதிக்காது, நாமே ஒரு தொழிற்சாலையால் பட்டுக்கொண்டிருக்கிற உபாதைகளையும் மனதில் கொள்ளாமல், அந்த அணுமின் ஆலையை திறக்கக் கோரி போராட்டம் நடத்த உங்களுக்கு என்ன தேவை வந்தது?
இதோ அருகில் இருக்கும் DCW ஆலையில் நடைபெறும் சுகாதார சீர்கேட்டிற்கும் அதனால் நமது சமுதாயத்தின் பொருளாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறதே? இருப்போர் செலவழிக்கிறார்கள் இல்லாதோர் வெளியில் கூட சொல்ல தயங்கி கண்ணெதிரிலேயே தங்களின் சொந்த பந்தங்களை காவு கொடுக்கும் ஆள் கொல்லி வியாதியான கேன்சர் நமதூரில் எத்தனை உயிர்களை பழிவாங்கி இருக்கிறது? அதற்காக கேள்வி கேட்கவோ அல்லது அதனை எதிர்த்து கடையடைப்போ அல்லது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமோ நடத்த திராணி இல்லாத ஒரு சமூகம், யாருக்காகவோ நீலிக்கண்ணீர் வடிப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross