Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byLebbai (Riyadh)[07 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17536
சாலை சலீம் காக்காவின் கேள்வி உணர்வுபூர்வமானது.
"கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று அங்குள்ள மக்களே அவர்களுக்காகவும் சுற்று வட்டார மக்களின் நலனிற்காகவும் போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் வேளையில், அவர்களுடைய உணர்வையும் நாம் மதிக்காது, நாமே ஒரு தொழிற்சாலையால் பட்டுக்கொண்டிருக்கிற உபாதைகளையும் மனதில் கொள்ளாமல், அந்த அணுமின் ஆலையை திறக்கக் கோரி போராட்டம் நடத்த உங்களுக்கு என்ன தேவை வந்தது? "
நமக்கு என்று DCW விசயத்தில் உணர்வு உண்டு. அதை மதிக்காமல், பக்கத்துக்கு ஊர்காரர் நமக்கு எதிராக பந்த் நடத்தினால், நமக்கு எப்படி இருக்கும்? கூடங்குளம் விசயத்தில் நமதூர் பேரை சொல்லி ஏன் மூக்கை நுழைக்கனும்?
DCW விசயத்தில் அதை எதிர்ப்பதுக்கு என்ன காரணமோ, அளவு கோளோ அது தான் கூடன்குளத்துக்கும் பொருந்தும்? அது அரசு சார்ந்த நிறுவனமாக இருக்கட்டும் அல்லது தனியார் நிறுவனமாகட்டும்- மக்கள் நலனே முக்கியம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross