Re:கிழக்கு கடற்கரை சாலை காயல... posted bySalih (Chennai)[30 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17970
கிழக்கு கடற்க்கரைச் சாலை காயல்பட்டினம் வழியாக அமையாவிட்டால் நாம் ஆறுமுகநேரி சென்று பேரூந்து ஏற வேண்டி இருக்கும் எனக்கூறுவது சரியென தெரியவில்லை. கிழக்கு கடற்க்கரைச் சாலை என்பது நெடுஞ்சாலை (Highway). அது தாண்டி செல்லும் ஊர்களில் இருந்து - அதனுடன் இணைய - இணைப்புச் சாலைகள் வசதி கண்டிப்பாக இருக்கும்.
கிழக்கு கடற்க்கரைச் சாலை காயல்பட்டினம் வழியாக அமைந்தால் நன்மைகள் சில உண்டு. இருப்பினும் சில ஆபத்துக்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் சாலை என்பதால் - இப்பாதையில் லாரி போன்ற பெரிய வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் அதி வேக பாதை என்பதால் விபத்துக்களுக்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் - வாகனப்புகை போன்ற பிரச்சனைகளும் நம் நகர் எல்லைக்குள் அதிகரிக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross