எங்களது 5 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இளஞ்சிங்கம் கர்ஜித்து இருப்பது எல்லா வகையிலும் நியாயமே . posted byசட்னி .செய்யது மீரான். (ஜெத்தா..சவுதி அரேபியா ...)[30 March 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17971
அஸ்ஸலாமு அலைக்கும்..
எங்களது 5 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்
இளஞ்சிங்கம் கர்ஜித்து இருப்பது எல்லா வகையிலும் நியாயமே .
முதல் கூட்டத்திலே தீர்மானம் இயற்றியும் இதுவரை
செயல்படுத்தாதது வருத்தத்திற்கு உரியது..
நமது நகர் மன்ற தேர்தலின் பொழுது
வேட்பாளர் அறிமுக பொது கூட்டம் ஒன்று
மக்கள்கள் கூடும் பொது இடத்தில நடந்ததில்
தான் தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டால்
பதவி ஏற்ற உடன் முதன் முதலாக இடும் ஆணை
நம் நகரில் உள்ள குடிநீர் மேல் நிலை
தேக்க தொட்டிகள் அனைத்தும் சுத்தபடுத்திடவும்
மற்றும் திறந்து கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டிகள்
அனைத்திற்கும் பாதுகாப்பான வகையில் மூடி
போடுவதாக வாக்களித்தார்கள்............
எல்லோர் முன்னிலும் வாக்களித்த அவர்களே
இன்று தலைவராகியும் உள்ளார்கள்.. .............
அது என் போன்ற எல்லோரின் காதுகளிலும்
எப்பொழுதும் ஒலித்து கொண்டு இருக்கின்றது...............
எங்கள் மக்தூம் பள்ளியில் கட்டப்பட்டு
இது நாள் வரை எந்த உபயோகத்திற்கும்
உதவாது உள்ள குடிநீர் மேல் நிலை
தேக்க தொட்டி நிலை என்னங்கோ???
யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்,,,,,
அத்தோடு எப்பொழுது இவைகளுக்கு
தீர்வுகள் உண்டாகும்
என்று மிகுந்த ஆவலோடு நாங்களும்
எங்களது 5 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்
அருமை தம்பியை போல் காத்து இருக்கின்றோம்...
பொது ஜனமாகிய நீங்கள் வேண்டால் மறந்து இருக்கலாம்.
பொது ஜனமாகிய நீங்கள் மறதியாளர்கள்???????????
ஆயினும் மேடை போட்டு அவர்களை அழைத்த
எங்களை போன்ற பொது நல அமைப்பினர்கள் மற்றும்
அது செய்தியை முழுமையாக வெளியிட்ட
இந்த வலைதளத்தை போன்ற மேலும் அனைவரும்
மறந்து இருக்க மாட்டார்கள்.... என்று நம்புவோமாக....
எல்லாம் அல்லாஹ்விற்கே வெளிச்சம்.....
என்றும் மாறாத அன்புடன்
சட்னி .செய்யது மீரான்.
ஜெத்தா..சவுதி அரேபியா ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross