Re:மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீப் ... posted bymackie noohuthambi (colombo)[03 April 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18048
வாழ்த்துக்கள். மறைந்தவர்களுக்கு மகுபிரதுக்காக அல்லாஹ்வை இறைஞ்சுவர்களுடன் நானும் இணைகிறேன். அல்லாஹ் அவர்களின் மண்ணறைகளை வெளிச்சமாக்கி வைப்பானாக,விரிவாக்கி வைப்பானாக , அவர்களுக்கு மேலான சுவர்க்க பதியை கொடுத்தருள்வானாக.
நன்கொடையாளர்களின் பாக்கிகளை வசூல் செய்ய கமிட்டி அமைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வரும் நோய். இதற்காக நான் பலமுறை புகாரி ஷரீபில் வாதாடி இருக்கிறேன். ஒரு அசிங்கமான முன் உதாரணம். ஒரு நாள் செலவு இவ்வளவு என்று தெளிவாக சொன்னபிறகு அந்த தொகையை உடனே கொடுத்து விடுவதுதான் சான்றோருக்கு அழகு.
எனது தந்தை மக்கி ஆலிம் அவர்கள் ஏலத்தில் எந்த சாமானும் பணம் கொடுக்காமல் எடுக்க விட மாட்டார்கள். நோன்பு காஞ்சி போட்டாலும் முன் பணமாக அல்லது கஞ்சி போட்ட அடுத்த நாளே பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்று வற்புறுத்தி எங்களை வளர்த்தார்கள். நாங்களும் அப்படியே செய்து வருகிறோம்.
நாங்கள் லட்சாதிபதிகள் அல்ல. இருந்தாலும் இந்த மாதிரி பொது நிகழ்சிகளுக்கு செலவை ஏற்றுக்கொள்வதும் அதை சபை செலவு செய்தபிறகு ஒரு வருடம் வரை அதை கொடுக்காமல் இருப்பதும் அல்லாஹ் ரசூலை கண்ணியப்படுதியதாகாது. அதற்காக வசூல் கமிட்டி அமைக்கும் பழக்கமும் தொடர்வது மனதுக்கு வேதனை தருகிறது. இந்த விஷயத்தில் புதிய நிர்வாகம் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
சுமார் 30 வருஷங்களாக நானும் சொல்லி அலுத்துவிட்டேன். யாரும் எதிர்புக்குரலுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். உடனே துஆ ஓத சொல்லி கூட்டத்தை முடித்து கொள்வார்கள். இப்போது உள்ள நிர்வாகம் இளைஞர்கள் கையில் உள்ளதால் பயமில்லாமல் முடிவுகளை மேட்கொள்ளுங்கள். ஒரு காலம் இருந்தது. ஊர் ஊராக போய் வசூல் செய்தோம் இப்போது அந்த நிலை இல்லை. எனவே ஏலம் எடுப்பவர்கள், ஒரு நாள் செலவு செய்பவர்கள், ஒரு சட்டிக்கு எழுதுபவர்கள் எல்லோரும் உடனடியாக அந்த தொகையை செலுத்தினால்தான் உண்மையான நன்மை அவர்களுக்கு கிடைக்கும். குரான் ஹதீத்களும் இதையே வற்புறுத்துகின்றன. அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross