தீதும் நன்றும் பிறர் தர வாரா! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[23 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18430
ஒரு பக்கம் டி.சி.டபுள்யூ ஆலையின் கழிவு மற்றும் வெளியேற்றும் புகையினால் ஏற்படும் விபரீதத்தால் கொடிய புற்று நோயின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வரும் நம் நகர்.மறுபக்கம் நகராட்சி துப்புறவு பணியாளர்களின் அசிரத்தையால் இது போன்ற கொடிய விளைவுகள்!
குடியிருப்புப் பகுதி மற்றும் தெருவுக்குள் எரியூட்டப்பட்டு குப்பைகளால் பாதிக்கப்படுவது சின்னஞ்சிறு குழந்தைகளும், வயதான முடியோர்களும் ஆஸ்த்துமா, இருமல், இளப்பு என அவதிப்பட்டு வரும் நிலை.அதையும் தாண்டி எரியும் பிளாஸ்டிக் புகையினை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயகரமான விளைவுகள்.
இது போன்று பிளாஸ்டிக் உட்பட எல்லாக் கழிவுகளையும் நகராட்சி பணியாளர்கள் அந்தந்த தெருக்களிலேயே எரியூட்டி நடையைக் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே! ஊர் முழுக்க ஆங்காங்கே குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
தற்போது யானைக்கால் நோய், டெங்குக் காய்ச்சல் வேறு நடமாடி வருகின்றது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பதைப் போல் நம்மவர் நமக்கே இழக்கும் கொடுமைகள் தம் இவை! தக்க நடவடிக்கை எடுக்காவிடின் நமதூரில் செயல் பட்டுவரும் கேன்சர் அவேர்னஸ் மற்றும் புற்று நோய் விழிப்புணவுக்கான அமைப்புகளின் சேவைகளுக்கு எவ்வித பலனுமில்லாமல் போய்விடக் கூடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross