மனிதர்களுக்கேத் தெரியாத போது...மாட்டுக்குத் தெரியுமா? மக்கும் குப்பை...மக்காத குப்பை...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[23 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18432
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி திடக் கழிவு மேலாண்மை செயல் திட்ட ஆய்வாளர் திரு,தனிகாச்சலம் இரண்டு நாட்களுக்கு காயல்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்புற புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ஆய்வு செய்து வருகின்றார். கழிவுகளை எரியூட்டாமல் மக்கும் குப்பை,மக்காத குப்பை எனப் பிரித்து சேகரிக்கும் பட்சத்தில், மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை புதிய சாலைகள் அமைக்கும் பணிக்குப் பயன் படுத்தவும் செய்யலாம் என ஆய்வாளர் கருத்து தெரிவித்தார். மக்கள் மத்தியில் குப்பைகளைப் பிரித்து கையாளும் செயல்பாடு பற்றிய போதிய விழிப்புணர்வு வர வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் இரு குப்பைக்கூடைகளை வழங்கி அதில் மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தனிதனியாக பெறவேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
நகராட்சியின் குப்பை வண்டிகளில் மிகத் தெளிவாக குப்பைகளைப் பிரித்துப் போடும் படி எழுதியிருந்தும் நம் மக்கள் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ஒன்றாகக் கலந்தே கொட்டுகின்றனர். ஆறறிவுள்ள மனிதர்களுக்கேத் தெரிய வில்லை! மக்கும் குப்பை,மக்காத குப்பை! இந் நிலையில் பாவம் மாடுகளுக்கு எங்கேத் தெரியப் போகின்றது? அது படு லாவகமாகக் கூடி நின்று கூட்டஞ்சோறு உண்பதை காண முடிகின்றது. பிளாஸ்டிக் கழிவுகளால் காலா காலத்திற்கும் மக்காமல் மண்ணில் மண்டிக்கிடக்கும் குப்பைகளால் நிலத்தடி நீர் வற்றி வறண்டு போகும் நிலமை ஒரு பக்கம், வாயில்லா ஜீவன்கள் அதை உட்கொண்டு வயிற்று உபாதைகளுக்கு ஆளாகி செத்து மடியும் கொடுமை மறு பக்கம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாத வரையில் நகரில் ஒரு சீர்திருத்தமும் வரப் போவதில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross