செய்தி: ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[09 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18754
இதில் விபரமறியாத நம்மவர்களே உயர் நீதி மன்றத்தோடு கைகோர்த்திருப்பது வியப்பாகவே உள்ளது.
இப்படிதான் முன்பு சங்பரிவார் கூட்டம், மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவர்கள் கூட சென்று வர உதவியாக இருந்த கப்பல் போக்கு வரத்தை நிறுத்தியது.
மத சார்பற்ற நம் நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையே அனைவரும் அவரவர் உரிமைகளை அனுபவிப்பது தான். இங்கு மற்ற மதத்தவரின் புனித ஸ்தலங்களுக்கு எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித கடமையை நிறைவேற்ற புனித மக்கா வரும் ஹாஜிகளுக்கு அரசாங்கத்துக்கு சொந்தமான போக்குவரத்தில் சில சௌகரியங்களை செய்கிறது. அவ்வளவுதான்.
மற்றபடி அணைத்து செலவும் ஹாஜி தன் சொந்த செலவிலேயே செய்கிறான். செலுத்துகிறான்.
இங்கு பல மாநிலங்களிலிருந்து கடை நிலை தொழிலாளி முதல் உயர் மட்ட முதலாளி வரை ஹஜ் கமிட்டியின் இந்த ஏற்பாட்டாலேயே ஒன்றாக பார்க்க முடிகிறது.
வேண்டுமானால் ஒரு முறை மட்டுமே கடமை, எனவே மறுமுறை இந்தியன் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்யாதவர்களுக்கு தான் முன்னுரிமை என சில கட்டுப்பாடுகளை மார்கத்திற்கு உட்பட்டு செய்யலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross