செய்தி: ‘புதிய தலைமுறை‘ தொலைக்காட்சியில், மமக, முஸ்லிம் லீக், பாஜக தலைவர்கள் பங்கேற்ற - ஹஜ் மானியம் குறித்த கருத்துப் பரிமாற்றம்! வீடியோ பதிவு வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘புதிய தலைமுறை‘ தொலைக்காட... posted bymackie noohuthambi (kayalpatnam)[11 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18780
புதிய தலைமுறை இதழியலில் முத்திரை பதித்து வருகிறது. kayalpatnam com அதை எடுத்து இங்கே மக்கள் மன்றத்தில் வைத்து மக்கள் நேரில் பார்பதுபோல் கேட்பதுபோல் அமைத்து தந்து அவர்களும் இணைய தளத்தில் தங்கள் முத்திரையை பதித்துள்ளார்கள்.வாழ்த்துக்கள்
நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்கிய அப்துர் ரஹ்மான் அவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பொன் ராதாக்ருஷ்ணன் அவர்கள் எல்லோரையும் பாராட்டுகிறோம்
ஏர் இந்தியா டிக்கெட் கப்பல் டிக்கெட் வித்தியாசத்தை பூதாகரமாக்கி "ஒரு மலை பிரசவித்து ஓர் எலியை ஈன்றது" என்ற கதைபோல் உச்ச நீதி மன்றம் தீர்ப்புகள் வழங்கி இருக்கிறது. எது எவ்வாறாயினும் 10 வருடங்கள் வரை
காத்திருக்க வேண்டாம். அடுத்த ஆண்டு முதல் இதை ரத்து செய்ய வேண்டும். காசி ராமேஸ்வரம் பெத்லஹெம் என்ற இடங்களுக்கு செல்லும் சலுகை ரயில்கள் பேருந்துகள், விமானங்கள் எல்லாவற்றையும் உடனடியாக ரத்து செய்யவேண்டும். மக்களுக்கு இலவச வேட்டி சட்டை மற்றும் விலையில்லா அரிசி, கிரைண்டர் போன்ற எல்லா சலுகை மானிய திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.என்பதுதான் என் போன்றவர்களின் கோரிக்கை
.முஸ்லிம் மக்கள், ஈனத்தனமான மானியத்துக்காக, மனைவி மக்களை துறந்து, வீடு வாசல்களை துறந்து, தொழில் வாய்ப்புகளை துறந்து சுக போகங்களை துறந்து ஹஜ் யாத்திரை செல்லவில்லை. ஏக இறைவன் விதித்த கடமையை நிறைவேற்றவும் அவனது இறை இல்லத்தை, அவனது திருநபியின் இல்லத்தை கண்டு மகிழ வேண்டும் என்ற பேரவாவினாலேயே அங்கு செல்கிறார்கள் என்பதை மாற்று மத சகோதரர்கள் புரிந்து கொள்ளுங்கள். மானியம் நின்றால் அது ஏர் இந்தியாவுக்கு பேரிடி என்பதை அரசுகள் புரிந்துகொள்ளட்டும். ஹஜ் பயணம் தொடரும்.
MEN MAY COME AND MEN MAY GO BUT I GO FOR EVER. ALLAH IS OMNIPOTENT, OMNIPRESENT.AS LONG AS THIS GLOBE EXISTS, THE HAJ PILGRIMAGE WILL CONTINUE. ONE CANNOT STOP A MARRIAGE IF YOU HIDE THE COMB.
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்று சில பைத்தியக்காரர்கள் நினைக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross