செய்தி: ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மையான முஸ்லிம்களுக்கு . posted byMohamed Adam Sultan (kayal patnam)[11 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18781
அருமை முஸ்லிம் மாந்தர்கள் ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்திருக்ககூடும் என்றே நினைக்கிறன்.
ஹஜ் கடமை என்றால் என்ன? நமக்கிருக்கும் எல்லா சக்தியையும் நம்மால் தீர்க்கமாக உறுதிபண்ணிய பிறகுதான் இப்ப புனித பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு மார்க்க உண்மை. இதை எல்லா மார்க்க ஆலிம்களும் அணுவளவும் பிசகாமல் தங்கள்(Fத்வா) தீர்ப்பில் சொல்லிருக்கிறார்கள்
நம் சக்தியில் சிறிதளவு குறைந்தாலும் அதனால் ஐந்தாவது கடமையாகிய புனித ஹஜ்ஜை நிறைவேற்றாவிட்டால் அலாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.
இப்படி மார்க்கம் நமக்கு வழிகாட்டிருக்கும்போது வேறு ஒரு வழியில் சலுகை கிடைக்கிறது என்று எந்தவழி என்று பார்க்காமல் எவர் தரும் சலுகை என்று அலசாமல் இனாம் என்றவுடன் இப்புனித மார்க்க கடமையை நிறைவேற்ற
அச் சலுகையை நிறைவேற்றுவதென்பது அப்புனித கடமையை முற்றிலும் புரியாத பாமரதன்மையாகதான் இருக்கும் என்பதில் இரு கருத்தில்லை.
பலமதத்தவர்கள் வாழும் இந்தநாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் சிறய தொகையை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் கடமையாற்ற பலபேர்
பிரச்னைகளுக்கிடையில் ஏதோ பிச்சை போடுவதை போல் போட்டுவிட்டு அதை பம்பட்டம் அடித்து அனைவரும் தெரியவேண்டும் என்று விளம்பரம் செய்கிறது இந்த அரசாங்கம்.
இவ்வளவு அவமானங்களுக்கிடையில் அந்த பெருவாரியான மாற்றுமத மக்கள் அரசாங்க பணத்தில் சிறிதளவை பெற்று இப்புண்ணிய கடமையை ஒரு பூரண முஸ்லிம் நிறைவேற்ற முன்வர வேண்டுமா?
பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவே தேவை இல்லை உடனே பத்து நிமடத்திலேய இத் தீர்ப்பை நிறைவேற்றினால் நிம்மதியடைவார்கள் முழுமையான மார்க்கத்தை பேணும் முஸ்லிம்கள்.
ஒவ்வொரு வருடமும் ஹஜ்மக்களின் அரசாங்க பிரதிநிதி என்று செல்லும் அரசியல்வாதிக்கு பல்லாயிரகணக்கான பணத்தை செலவு செய்து அனுப்பிவைக்கிறார்கள்.
அவரும் சென்று செலவு செய்துவிட்டு வருகிறார் .
இங்கு வந்த பின்னர் அவர் வாழ்கை முறையோ,
அல்லாஹ் காப்பாற்றுவான் அதை எழுதவே என் கை கூசுகிறது.வாசகர்களே யூகித்து கொள்ளுங்கள் .
ஆக இந்த ஹஜ் விஷியத்தில் அரசாங்கத்தில் ஆரம்பத்திலேயே அடிப்படை கோளாறு .
நம் அரசாங்கம் இவ் விசியத்தில் முஸ்லிம் களுக்கு ஒரு நேர்மையான நன்மை பயக்கும் சலுகை செய்ய வேண்டும் என்று நினைத்தால்,
சென்னை லிருந்து ஜித்தாவிற்கு மற்றய நாட்டு விமான கட்டணம் (சௌதி அரேபியா)போல் வசூலித்தால் போதுமானது. air india விமான கட்டணம் பலமடங்கு மற்ற நாட்டு விமான கட்டணத்தை விட அதிகம்.
ஆகவே இந்தநேர்மையான கட்டண நடவடிக்கையே முஸ்லிம் மக்களுக்கு செய்கின்ற சலுகையாக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross