செய்தி: மே 23 - முஸ்லிம் லீக் சொந்தக் கட்டிடம் “தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர் மன்ஸில்” திறப்பு விழா குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்! பொறுப்புகள் பகிர்ந்தளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மே 23 - முஸ்லிம் லீக் சொந... posted bySalai Sheikh Saleem (Dubai)[16 May 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18875
என் அன்பு தோளவாப்பா, ஏன் என் தோழரும் கூட, மர்ஹூம் PHM அப்துல் காதர் ஹாஜி அவர்களை நமதூர் அறவே மறந்துவிட்ட ஒரு தருணத்தில், அவர்கள் முஸ்லீம் லீக்கில் இருந்து நமது சமுதாய தொன்றாட்டியதை நினைவு கூர்ந்து அவர்களின் பெயரை முஸ்லிம் லீக்கின் சொந்த கட்டிடத்திற்கு வைத்து தங்களது நன்றியினை காணிக்கையாக்குவது மிகவும் வேண்டப்பட்ட ஒரு செயல் தான்.
மர்ஹூம் அவர்களோடு மிகவும் நெருங்கி பழகும் பெரும் வைப்பை பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதால், அவர்களின் நற்க்குனங்களைப்பற்றி என்னால் நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. அகில இந்திய முஸ்லீம் லீக்கில் இவர்களை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, முஸ்லீம் லீக்கின் மாநாடு கன்னியாகுமரியில் இருந்து தலைநகர் டில்லி வரை எங்கு நடைபெற்றாலும் தவறாது கலந்து கொள்ளுபவர் - அவ்வளவு வெறியர் என்றே சொல்லலாம். கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களிடம் நேரடி தொடர்பு, அதுபோலே மர்ஹூம் அப்துல் சமத், பனத்வாலா, அப்துல் லதீப் உட்பட பல முக்கிய தலைவர்களின் தொடர்பு பட்டியலில் இவர் தலையாய இடம் பெற்றிருக்கிறார்.
தாய்ச்சபை (எனக்கு அவர்கள் சொல்லித்தந்தது அப்படித்தான்) எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு, நமதூரில் தாய்ச்சபையின் முன்னேற்றத்திற்க்காக எவரிடமும் கையேந்தாது தன் சொந்த பணத்தில் கட்சியின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட்டவர்கள்.
பதவிக்கும் பட்டத்திற்கும் எந்தவித ஆசையும் கிடையாது. கடைசிவரை முஸ்லீம் லீக்கின் அடிமட்ட தொண்டனாகவே இருந்துவிட்டவர்கள்.
பச்சை கலரின் மீது அவர்களுக்குள்ள அளவிற்கதிகமான பற்று, ஒரு நாள் நானும் அவர்களும் பம்பாய் நகரில் நடந்து போய்க்கொண்டிருந்த போது நடைபாதையில் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு சிறிய பச்சை கலர் envelope கட்டு ஓன்று வாங்கினார்கள். நான் அவர்களிடம் இதை வைத்து என்ன பண்ண போகிறீர்கள் இது சின்ன கவர் ஆச்சே ? என்றதற்கு அது பச்சை கலரின் இருந்தததால் வாங்கிவிட்டேன் என்று குழந்தை தனமாக சொன்னார்கள்.
பழகுவதற்கு அவர்கள் வபாத் ஆகும் வரை பச்சை குழந்தைதான், மனதில் எந்தவித சூது வாது என்பதே கிடயாது, ஒரு பரம எதிரி வந்து உங்களை கத்தியால் குத்த வேண்டும் என்று அனுமதி கேட்டாலும், இவர்கள் எனக்கு வலிக்காமல் குத்திவிட்டு போ என்று சொல்லும் இளகிய மனம் படைத்த வள்ளல் பெருமான்.
இவர்களின் "கொடை வள்ளல்" தன்மையை இன்னும் ஊரில் பல பேர்கள் நினைவு கொள்ளலாம். தான் போட்டிருக்கும் சட்டையை மட்டும் தான் அவர்கள் கழற்றி கொடுக்க வில்லை. தான தர்மத்தில் எனக்கு தெரிந்து இவர்களை மிஞ்ச நமதூரில் யாரும் இல்லை.
அதேபோல் அல்லாஹ் உதவியால் இவர்களின் புதல்வர்களும் இவர்களை எந்த வித தொந்திரவும் பண்ணாமல் மர்ஹூம் அவர்களுக்கு எது பூரண திருப்தி கொடுக்கிறதோ அதே வழியில் அவர்களை வெற்றிகரமாக பயணிக்க செய்தது அவர்களுக்கு பெரும் பலமாக இருந்தது. அன்னாரின் துணைவி அவர்கள் எங்கள் சாளை குடும்பத்தில் உள்ளவர்கள் என்று சொல்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி உண்டு.
இப்போது கூட அன்னாரை நினைவு கூறும் போது என் கண்களில் கண்ணீர் முட்டுகிறது. என்னொரு மா மானிதர். அவர்கள் வெறும் தியாகி அல்ல - தியாகச்செம்மல்.
இன்னும் எவ்வளவோ கூறிக்கொண்டே போகலாம், கருத்தின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன்.
எலாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளையும் பொருத்து, அன்னாரின் கபூரை பிரகாசமாக்கி வைத்து, அவர்களை மறுமையில் மனம் கமழும் நல்லடியார் கூட்டத்தில் புனித ஜன்னத்த் அல் பிர்தௌஸ் என்ற சுவன பூங்காவில் வீற்றிருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross