இம்மாதம் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளைக்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடம் - “தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர் மன்ஸில்” திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில், பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளைக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள கட்டிடத்தில், “தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர் மன்ஸில்” என்ற பெயரிலான கட்சியின் நகர கிளை அலுவலகத்தின் திறப்பு விழா, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார்.
இவ்விழாவை சிறப்புற நடத்துவது குறித்தும், விழாவிற்கு வருகை தரும் கட்சியின் மாநில தலைவரும் - தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை வரவேற்பது குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் ஆலோசனைக் கூட்டம், 15.05.2012 அன்று (இன்று) இரவு 07.30 மணியளவில், கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் அவர்களின் காயல்பட்டினம் தீவுத் தெரு இல்லத்தில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.எம்.தைக்கா உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தின் நோக்கம் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - ஸலவாத், திக்ர் மஜ்லிஸ்:
மே 23ஆம் தேதி கட்சி அலுவலக திறப்பு விழாவை முன்னிட்டு, முந்திய நாளான மே 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, அலுவலக கட்டிடத்தில் ஸலவாத் மற்றும் திக்ர் மஜ்லிஸ் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான பொறுப்பாளர்களாக,
மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம்,
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்,
ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர்,
ஜனாப் அரபி ஷாஹுல் ஹமீத்,
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 02 - தலைவருக்கு வரவேற்பு:
மே 23ஆம் தேதியன்று காலையில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் காயல்பட்டினம் வந்திறங்கும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை வரவேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலமாக நகருக்குள் அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது.
வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட,
ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்,
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்,
எம்.இசட்.சித்தீக்,
எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம்
ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
தீர்மானம் 03 - திறப்பு விழா ஏற்பாட்டுக் குழு:
நகரெங்கும் பிறைக்கொடி தோரணம் கட்டல், டிஜிட்டல் பதாகைகளை ஆயத்தம் செய்தல், திறப்பு விழாவிற்காக அலுவலக கட்டிடத்தை தூய்மைப்படுத்தி ஆயத்தம் செய்தல், பந்தல் ஏற்பாடுகள், பார்வையாளர் இருக்கை வசதிகள் உள்ளிட்ட திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிக்க, நகர செயலாளர் ஜனாப் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் தலைமையில்,
ஜனாப் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை,
ஜனாப் எஸ்.எம்.தைக்கா உமர்,
ஜனாப் எம்.எச்.அப்துல் வாஹித்,
ஜனாப் எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன்,
ஜனாப் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
தீர்மானம் 04 - மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்:
மே 24ஆம் தேதியன்று காலையில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மகளிரை ஒன்றுதிரட்டி, மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை - கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் தஸ்ரீஃப் ஜஹான் அவர்களைக் கொண்டு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கருத்தரங்க ஏற்பாடுகளைக் கவனிக்க,
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்,
ஹாஜி எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்,
ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத்,
நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.மிஸ்ரிய்யா
ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 05 - தொடர்வண்டித் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்:
ரூ.70 லட்சம் செலவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் செய்து முடிக்கப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மே 28ஆம் தேதியன்று, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளைக் கவனிக்க,
ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்,
ஜனாப் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்,
ஜனாப் எம்.எச்.அப்துல் வாஹித்,
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்
ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 06 - தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சி நிரல்:
*** தொடர்வண்டி நிலையத்திலிருந்து, காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் இல்லத்திற்கு தலைவரை மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் அழைத்து வரல்...
*** கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட - தற்போது சுகவீனமுற்று ஓய்விலிருக்கும் ஹாஜி விளக்கு அப்துல் காதிர், காயல்பட்டினம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் செயலாளர் ஜனாப் தஸ்தகீர் ஆகியோரை, தலைவர் பேராசிரியர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று நலம் விசாரித்தல்...
*** அன்று காலையில், ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களின் குடும்ப திருமணத்தில் பங்கேற்பு...
*** மாலையில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய கால்பந்துப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு...
*** பின்னர், கட்சிக்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடம் - தியாகி பி.எச்.எம்.அப்துல் காதர் மன்ஸில் திறப்பு விழாவில் பங்கேற்று, கட்டிடத்தைத் திறந்து வைத்து சிறப்புரை...
*** பின்னர், காயல்பட்டினம் சீதக்காதி நகரிலுள்ள கட்சிக்குச் சொந்தமான சொத்தை விற்று, சதுக்கைத் தெருவில் இக்கட்டிடத்தை வாங்க உழைத்த
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
ஜனாப் எம்.எச்.அப்துல் வாஹித்,
ஜனாப் பெத்தப்பா சுல்தான்,
ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர்
ஆகியோருக்கு தலைவர் பேராசிரியர் சால்வை அணிவித்து கவுரவித்தல்...
*** செய்தியாளர் சந்திப்பு...
*** அன்றிரவு, ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி அவர்களின் குடும்ப திருமணத்தில் பங்கேற்பு...
*** மறுநாள் - மே 24 அன்று, காலையில் நடைபெறும் மகளிரணி கருத்தரங்கைத் துவக்கி வைத்தல்...
*** பின்னர், தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி புறப்பாடு...
இவ்வாறு, தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நகர துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 23:37/22.05.2012] |