சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 64 வது செயற்குழு கூட்டம் கடந்த 11.05.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் சகோ. எம்.என்.முஹம்மது ஷமீம் இல்லத்தில் வைத்து நடந்தேறியது. அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 64 வது செயற்குழு கூட்டம் கடந்த 11.05.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் சகோ. எம்.என்.முஹம்மது ஷமீம் இல்லத்தில் வைத்து நடந்தேறியது. கூட்டத்திற்கு சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதர் தலைமை ஏற்க, சகோ.ஹாஜா ரஹ்மத்துல்லாஹ் இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது, தொடர்ந்து வரவேற்புறையை சகோ. எம்.என்.முஹம்மது ஷமீம் நிகழ்த்தினார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்றத்தின் தலைவர் சகோ. குளம். அஹமது முஹிய்யதீன் நாம் ஏற்கனவே போட்ட தீர்மானப்படி கல்விக்கு எப்படி தனி இக்ரா என்ற அமைப்பை ஏற்படுத்தினோமோ அதுபோல் நாம் மருத்துவதிற்கென ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் நாம் மருத்துவ தேவைக்கு வரும் விண்ணப்பங்களை விரைவாக மருத்துவர் மூலம் பரிசீலித்து உடன் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும். என்ற கருத்தையும் அங்கே பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மன்ற செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் நாம் கடந்த பொதுக்குழுவை மிக சிறப்பாக நடத்தியதை பலர் பாராட்டி மின் அஞ்சல் மூலம் வாழ்த்தியுள்ளனர். மேலும் இக்ரா மற்றும் காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் இணைந்து நடத்தும் State Topper நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டி பேசியதோடு அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நாமும் நமது பங்களிப்பை செலுத்தவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதனை மன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர்
கடந்த செயற்குழுவில் நடந்த நிகழ்வுகளையும், வழங்கிய மருத்துவ உதவிகளையும், நிறைவேற்றிய தீர்மானங்களையும் கோடிட்டு காட்டினார் மன்ற செயலாளர் சகோ.சட்னி செய்யத் மீரான்.
நிதி நிலை:
நிதி நிலை அறிக்கையை சகோ. எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல்காதர் இக்ராவின் கல்வி நிதிக்கு ஒன்பது மாணவர்களுக்கென தொகை ஒதுக்கிய பின், தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள் போன்ற விபரங்களைப்பற்றி மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
மருத்துவ உதவிகள்:
இம்மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் மற்றும் ஜமாத் பரிந்துரையின்படி வந்த கடிதம் ஏற்கப்பட்டு வயிற்றில் கட்டி, பிக்ஸில் கஷ்டப்படும் எட்டு வயது குழந்தை , சக்கரை நோயில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று வயது குழந்தை, ஒரு வயது குழந்தையின் பாதிப்புள்ளான இருதய வால்வு, மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு, விபத்தில் காயமுற்ற மாணவிக்கு, இருதய அறுவை சிகிச்சை, மற்றும் குழந்தையின் மூச்சு திணறல் சிகிச்சை, என ஆக மொத்தம் ஒன்பது பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
1 - முதல் முயற்சியே முழு வெற்றியான நிகழ்ச்சியாக எல்லோராலும் புகழப்படும் 'காயல் சங்கமம்' பொதுக்குழு கூட்டம் மிக சிறப்புடன் நடாத்த துணை புரிந்த வல்ல அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும் நன்றியும் உரித்தாகட்டும். இதற்காக வாகன வசதியால், பொருளால், உடல் உழைப்பால், களைப்பை ஏற்று சிரமம் பாராமல் பலஇடங்களிலிருந்து வந்து சிறப்பித்து தந்த நல்ல உள்ளங்கள், மற்றும் செய்தி ஊடகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!.
2 - நமது இக்ராஃவின் 2012 -ம் வருட நிர்வாக செலவிற்கு ரூபாய், பதினைந்து ஆயிரம் (ரூபாய்,15,000) மற்றும் 2012-2013 ஆவது கல்வி ஆண்டிற்கான உயர் கல்விக்கு உதவி தொகை தலா ரூபாய் ஐந்து ஆயிரம் வீதம் ஒன்பது பயனாளிக்கு மொத்தம் ரூபாய் நாற்பத்தி ஐந்து ஆயிரம்(ரூபாய் 45,000) அளித்திட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
3 - சகோ.ஷமீம் (பாட்சி) இல்லம் மாற்றப்படுவதால், இதுவரை நடந்த செயற்குழுக் கூட்டத்திற்கு இடம் தந்து உதவிய சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம், காணப்பா இஸ்மாயில், கேரளா சிகபுதீன் மற்றும் இதர பாட்சி நண்பர்களுக்கும் இம்மன்றம் இதயப்பூர்வமான நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றது.
4 - முதன் முதலாக மக்காவில் வைத்து அடுத்த 65 வது செயற்குழுக் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்னர் அறியத்தரப்படும்
சகோ.இஸ்மத்துல்லாஹ் அனுசரணையுடன் இரவு சிறப்பான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இறுதியாக சகோ. மொகுதூம் முஹம்மது - சீனா நன்றி நவில பின்னர் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் 'துஆ' பிராத்தனையுடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவுப் பெற்றது அல்ஹம்து லில்லாஹ்.
சகோ. எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.சட்னை எஸ்.ஏ. முஹம்மது உமர், காணப்பா இஸ்மாயில், கேரளா சிகபுதீன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல் காதர்
துணைச்செயலாளர்,
காயல் நல மன்றம், ஜித்தா.
|