ஐக்கிய அரபு அமீரகம், அபூதபீ காயல் நல மன்றத்தின் 3ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நகர்நல திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரகத் தலைநகர் அபுதாபியில் காயல் நல மன்றத்தின் மூனறாவது செயற்குழு கூட்டம் 11-05-2012 அன்று மாலை மன்றத்தின் கவுரவ தலைவர் ஜனாப் இம்தியாஸ் அகமது தலைமையில் அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.
இளவல் ஜனாப் வஸ்வி சஜ்ஜாத் [ ஜனாப் இம்தியாஸ் அகமது அவர்களின் புதல்வர் ] அவர்கள் இறைமறை கிராத் ஓத கூட்டம் துவங்கியது.
கடந்த செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செய்து முடித்துள்ள திட்டங்களை நினைவுகூர்ந்து, செய்யவிருக்கும் மற்றத்திட்டங்களுக்குஆக்கபூர்வாமான நல்ல பல ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்டது.விடுமுறையில் காயலுக்கு சென்றுள்ள நமது மன்ற பொறுப்பாளர்களின் நில தல ஆய்வு அறிக்கை [GROUND STUDY REPORT] வாசிக்கப்பட்டு, நமது மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட சாதனை ஹாஃபிழ் மாணவ மாணவிகளின் ஊக்கத்தொகை ரூபாய் [10,௦௦௦] பத்தாயிரத்தை இக்ரா கல்விச்சங்கத்திடம் ஒப்படைத்ததை அறிவிக்கப்பட்டது.
காயல் மருத்துவ விழிப்புணர்வு குழு:
நமது நகரில் பெருகி வரும் நீரிழிவு நோய் [Diabetes], புற்று நோய்[Cancer], உடல் பருமன் [Obesity] போன்றவைகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும், குழைந்தை மற்றும் கர்பினி பெண்களின் பராமரிப்பு ஆகியவைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த pamphlet and notice [கைப்பிரதி மற்றும் பிரசுரம்] உருவாக்க
DR. செய்து அகமது,
DR. யாசர்,
ஜனாப் M.S.முஹம்மது உமர்,
ஜனாப் M.M.குளம் அபூபக்கர்
ஆகியவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த பிரசுரத்தை ஒவ்வாரு வீட்டிலும் கொடுக்க நகரின் பொதுநல மன்றங்களின் உதவிகளை நாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடர்புகளை ஹாபிஃழ் சாகுல் ஹமீது மேற்கொள்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. விழாக்காலங்களில் மருத்துவ விழிப்புணர்வு மையம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
மன்றத்தின் சட்டத்திட்டங்கள் முன்வரைவு கமிட்டி:
மன்றத்தின் அனைத்து முற்போக்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செம்மையாக நிறைவேற்ற மன்றத்திற்கென தனிப்பட்ட சட்டத்திட்டங்களை [By – Laws] முன்வரைந்து செயற்குழுவில் சமர்பிக்க
தலைவர் ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம்,
கவுரவத் தலைவர் ஜனாப் இம்தியாஸ் அகமது,
துணைத்தலைவர் மக்பூல் அகமது,
செயலாளர் V.S.T.ஷேக்னா லெப்பை,
துணைச்செயலாளர் ஆர்கிடெக்ட் ஹபீப் ரஹ்மான்,
செயற்குழு உறுப்பினர்கள் ஹுசைன் நூர்தீன்,
ஹாபிஃழ் ஹுசைன் மக்கி ஆலிம்,
S.A.C.ஹமீத்
ஆகியோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மன்ற நிதி நிலையை மேம்படுத்துதல்:
திட்டமிட்ட படி மன்ற நிதி வசூல் அனைத்தும் முறையாக பெற்றிட உண்டான சிக்கல்களை களையவும், தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தி மன்றத்தின் மூலாதாரமான நிதி நிலையை மேம்படுத்த அவசர மேலாண்மைக் குழுவுடன் நிதி நிலை குழுவும் சேர்ந்து சிறப்பு கூட்டம் அமைத்து பணியாற்றிட முடிவு செய்யப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சாற்றல் வகுப்பு:
நமது மன்ற செயல் திட்டங்களில் ஒன்றான ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சாற்றல் வகுப்புகளை காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிகளின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியிலேயே மற்ற பாடங்களுடன் நடத்துவதற்காக ஒரு தனிப்பட்ட காலம் [ SEPERATE PERIOD ] ஒதுக்கப்பட்டு நமது மன்றத்தின் முழு அனுசாரனையில் தகுதிவாய்ந்த பொது ஆசிரியரை இக்ராஃ சங்கம் மூலம் நியமித்தும் நிர்வகித்தும் வர ஆலோசிக்கப்பட்டது. இதற்காக இக்ராஃவை தொடர்பு கொள்ள மன்றத்தின் P.R.O. ஜனாப் A.R. ரிபாய் அவர்களை நியமித்தது.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் ஜூன் 08ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அறிவித்து அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின் கூட்ட குறிப்பு:
அண்மையில் காயலில் சமுதாய சேவையாற்ற பல நிஜாம்களைக் கண்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் உருவாகிய காயல் நலமன்றத்திற்கும், அதன் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எமது மன்றம் வாழ்த்துவதுடன் சிறந்த காயலை உருவாக்க மனமார துஆ செய்கிறது.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்.
படங்கள்:
V.S.T.ஷேக்னா லெப்பை
மற்றும்
ஹுபைப்,
காயல் நல மன்றம்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |