வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் (கே.பி.எல்.) என்ற பெயரில் ஆண்டுதோறும் க்ரிக்கெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் க்ரிக்கெட் போட்டிகள், வரும் மே மாதம் 17ஆம் தேதி (இன்று) முதல் 26ஆம் தேதி வரை காயல்பட்டினம் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டித் தொடரில் க்ரீனிஷ் கவுன்டி, ஃபை ஸ்கை பாய்ஸ், காலரி பேர்ட்ஸ், காயல் ராக்கர்ஸ், வாவு வாரியர்ஸ், ஃபைனல் சேலஞ்சர்ஸ், மஹேந்திரா பவர்ஆல் மற்றும் காயல் டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் முறையில் விளையாட உள்ளன. வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காயல்பட்டினத்தின் தலைசிறந்த வீரர்கள் இவ்வணிகளின் கீழ் விளையாடவுள்ளனர்.
இன்று மதியம் 02.00 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போட்டிங் கிளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் சுற்றுப்போட்டி துவக்க விழா நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் தலைசிறந்த க்ரிக்கெட் வீரர் யூஸுஃப், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டியைத் துவக்கி வைக்கவுள்ளார்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில், காலரி பேர்ட்ஸ் அணியும், வாவு வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இச்சுற்றுப் போட்டியின் அனைத்துப் போட்டிகளையும் கண்டுகளிக்க வருமாறு விளையாட்டு ஆர்வலர்களுக்கு, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுப்போட்டி ஏற்பாடுளை, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் இயக்குநர் ஹாங்காங் அலீ ஃபைஸல் வழிகாட்டலில், குழுவினர் செய்து வருகின்றனர்.
தகவல்:
M.ஜஹாங்கீர். |