வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் (கே.பி.எல்.) என்ற பெயரில் ஆண்டுதோறும் க்ரிக்கெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் க்ரிக்கெட் போட்டிகள் காயல்பட்டினம் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் 18.05.2012 அன்று (நேற்று) துவங்கியது.
இப்போட்டித் தொடரில் க்ரீனிஷ் கவுன்டி, ஃபை ஸ்கை பாய்ஸ், காலரி பேர்ட்ஸ், காயல் ராக்கர்ஸ், வாவு வாரியர்ஸ், ஃபைனல் சேலஞ்சர்ஸ், மஹேந்திரா பவர்ஆல் மற்றும் காயல் டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் முறையில் விளையாட உள்ளன. வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காயல்பட்டினத்தின் தலைசிறந்த வீரர்கள் இவ்வணிகளின் கீழ் விளையாடுகின்றனர்.
நேற்று மதியம் 02.00 மணிக்கு, சுற்றுப்போட்டி துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் கழக தேர்வுக்குழு உறுப்பினரும், முன்னாள் தலைசிறந்த க்ரிக்கெட் வீரருமான யூஸுஃப், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினருக்கு, போட்டி ஏற்பாட்டாளர்கள் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
அனைத்தணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அணித்தலைவர்களுன் சிறப்பு விருந்தினர்கள்...
பின்னர் சிறப்பு விருந்தினர் யூஸுஃப் முதல் பந்தை வீச, முன்னிலை வகித்த ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் துடுப்பெடுத்தாடி போட்டியைத் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில், காலரி பேர்ட்ஸ் அணியும், வாவு வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸில் வென்ற காலரி பேர்ட்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
காலரி பேர்ட்ஸ் அணியினர்...
வாவு வாரியர்ஸ் அணியினர்...
முதலில் துடுப்பெடுத்தாடிய வாவு வாரியர்ஸ் அணி, அனைத்து வீரர்களையும் இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஹுஸைன் 13 ஓட்டங்களும், சித்தீக் 12 ஓட்டங்களும் பெற்றனர். காலரி பேர்ட்ஸ் அணியின் ஸமத் 2 வீரர்களை வீழ்த்தினார். கைஸாலிஹ், ஜஹாங்கீர், சதக், யாஸர் ஆகியோர் தலா ஒரு வீரரை வீழ்த்தினர்.
ஆட்டமிழந்து வெளியேறுகிறார் வாவு வாரியர்ஸ் வீரர் முஹம்மத்...
அடுத்து விளையாடிய காலரி பேர்ட்ஸ் அணி 29 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்தது. அந்த அணியின் இஸ்மாஈல் அதிகபட்சமாக 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். எதிரணியின் ஹுஸைன் 3 வீரர்களையும், ஹுஸைன் ஜூனியர் 2 வீரர்களையும், வாவு காக்கா மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் தலா ஒரு வீரரையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில், வாவு வாரியர்ஸ் அணி 30 ஓட்டங்கள் வேறுபாட்டில், காலரி பேர்ட்ஸ் அணியை வென்றது.
நேற்று நடைபெற்ற போட்டியை, நகரெங்கிலுமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
தகவல் மற்றும் படங்களில் உதவி:
M.M.ஷாஹுல் ஹமீத். |