இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளைக்காக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் சொந்தக் கட்டிடம் வாங்கப்பட்டு, கட்சி அலுலவகம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா, இம்மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்குகிறார்.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா பெயர்ப்பலகையைத் திறந்து வைக்கிறார். கட்சியின் மாநில - மாவட்ட நிர்வாகிககள் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் மற்றும் மாவட்ட - நகர நிர்வாகிகள் செய்து வருகின்றனர். |