காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், நாளுக்கு நாள் தொழுகையாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு. பள்ளியை விரிவுபடுத்திக் கட்டிட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
துவக்கமாக, பள்ளியின் தென்பகுதியை விரிவாக்கி, அகன்ற கட்டிடம் கட்டப்பட்டு, கான்க்ரீட் போடப்பட்டுள்ளது.
தற்போது, பள்ளியின் மிஹ்ராப் அமைந்துள்ள உள்பள்ளியில் தரை மட்டத்தை உயர்த்திக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, பள்ளியின் மிம்பர் (மேடை) உள்ளிட்ட பகுதிகள் இடித்தகற்றப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமைக்குள் உள்பள்ளி கட்டிடப் பணிகளை நிறைவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. உள் பள்ளியில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால், ஐவேளைத் தொழுகை வெளிப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
|