Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:02:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8486
#KOTW8486
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 22, 2012
பொதுமக்களுக்கு, ஹாங்காங் கஸ்வா அமைப்பின் ஆண்டறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2974 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல அமைப்பான கஸ்வாவின் நலப்பணிகள் குறித்த தகவலறிக்கை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-

பொதுமக்களுக்கு ஹாங்காங் கஸ்வா-வின் தகவலறிக்கை

நஹ்மதுஹு வனுஸல்லி வநு ஸல்லிமு அலா ரசூலிஹில் கரீம். கண்ணியம் மிகுந்த நம் காயல் நற்பதியின் நன்மக்கள் அனைவர்களுக்கும் எம் கஸ்வா (KSWA - Kayal Students Welfare Association - Hong Kong) அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் கனிவான ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

எல்லாம் வல்ல ரஹ்மானின் கிருபையாலும், கண்மணி நபி ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் இன்னும் உங்களை போன்ற அனைத்து நல்ல உள்ளங்களின் துஆ பரகத்தினாலும் நமது கஸ்வா அமைப்பு, 1998ஆம் ஆண்டு ஹாங்காங் நாட்டில் துவங்கப்பட்டு இன்று வரை எளிய முறையில் அதன் சேவையை நமது காயல் நகர ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்காக உதவி செய்து வருவது தாங்கள் யாவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்!

அமைப்பின் நோக்கம்!
நமதூரில், கல்லாமையை இல்லாமையாக்குவது, ஏழை-எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி (Professional Courses)யை சிரமமின்றி அடைய செய்வது போன்ற நல்லெண்ணங்களை முற்படுத்துவதே நம் கஸ்வாவின் அடிப்படை நோக்கம்.

பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் (On Merit Basis) தங்களின் உயர் கல்விக்கு போக வசதியற்ற நம் ஊர் முஸ்லிம் மாணவர்களுக்கு, அல்லாஹ்வின் உதவிக்கொண்டு அவர்களின் உயர் படிப்பு படிக்கும் காலம் முழுவதும், அவர்களை தத்தெடுத்து (படிப்பு மற்றும் ஹாஸ்டல் சம்மந்தப்பட்ட அனைத்து செலவுகளுக்கும் பொறுப்பேற்று) அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்கமான வாழ்விற்கும் ஓர் அடித்தளமாக இருந்து, அந்த மாணவ செல்வங்களை அவர்களின் குடும்பத்திருக்கும், நம் ஊருக்கும், நம் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடியவர்களாக உருவாக்குவது நம் கஸ்வா வின் தூய எண்ணத்தில் ஒன்றாகும்.

கஸ்வாவின் மாணவர்கள்!
சற்றொப்ப 14 ஆண்டுகள், ஏறத்தாழ 21 மாணவர்கள் படித்து முடித்தும், 7 மாணவர்கள் படித்து கொண்டும் இருகின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்!



வெற்றிகரமாக படித்து முடித்தவர்கள், உலகின் பல திசைகளிலும் உயர்ந்த பணியில் இருகின்றார்கள் என்பதை நாம் அறியும் போது, இந்த வாய்ப்பை நமக்கு அளித்த வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும் என்று மனதார நன்றியோடு புகழ்வதை தவிர வேறு வார்த்தைகள் நமக்கு இல்லை.

மேலும் நம் மாணவர்கள், தாங்கள் பெற்ற பெரும் உதவியை, தங்களை போன்ற மற்ற மாணவர்களும் எதிர் காலத்தில் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், நம் அமைப்பின் மூலம் தாங்கள் பெற்ற பொருள் உதவியை தங்களால் இயன்ற வரை நம் அமைப்பிற்கு நன்றி பெருக்கோடு திருப்பி செலுத்தி வருவதை நாம் மகிழ்ச்சியோடு இத்தருணத்தில் அறிய தருகின்றோம்.

கஸ்வாவின் பிராத்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்
இன்ஷா அல்லாஹ், நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு 22.05.2012 அன்றும், பத்தாம் வகுப்பு முடிவு 04.06.2012 அன்றும் வெளிவரவுள்ளது. இதில் எல்லா மாணவர்களும் நன்மதிப்பெண்களுடன் வெற்றிபெற கஸ்வா துஆவுடன் வாழ்த்தும் தெரிவிக்கின்றது! யாஅல்லாஹ்! எமது மாணவர்களுக்கு உன் கருணையால் எல்லா வகையான வெற்றியும் தொடர்ந்து தந்தருள்வாயாக!

வழமை போல் இவ்வருடமும் நம் கஸ்வா அமைப்பு, மெரிட் முறையில் (Anna University Counselling) கல்லூரி இடம் கிடைக்கும் நம்மூர் ஏழை இஸ்லாமிய +2 மாணவர்களுக்கு உதவிட தயாராக உள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்! வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

கஸ்வாவின் தணியாத ஆசை மற்றும் எதிர்கால திட்டம்
நம் ஊர், நம் இஸ்லாமிய சமுதாயம் என்றென்றும் கல்வியிலும், மருத்துவ சேவையிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதுதான் கஸ்வாவின் தணியாத ஆசை. (வல்ல ரஹ்மான் அதற்கு துணை நிற்பானாக!) அந்த ஆசையின் அடிப்படையில் நம் கஸ்வா அமைப்பு அதன் எதிர்கால திட்டத்தை விரிவாக்கி உள்ளது!

இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில், கீழ்க்காணும் பட்டப்படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நாடியுள்ளோம்!

*** Medical Courses : All Kind of Medical studies, especially, DGO, DCH, NURSING, MD, DM, CANCER SPECIALISTS, HEART SPECIALISTS etc...

*** Civil Service Courses : IAS, IPS, IFS, Government service courses like (Indian Railway Jobs, Tasildar, Municipality Officers etc.,)

*** Post Graduate Courses : M.Ed, M.Phil, P.hD, M.B.A, M.C.A

மேற்கண்ட பட்டபடிப்பிற்கு மெரிட் முறையில் தகுதி பெற்றும் குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியின் காரணமாக தங்களுடைய கல்வியை தொடர முடியாத நம் ஊர் இஸ்லாமிய மாணவ மாணவிகள் எங்கள் அமைப்பை அணுகினால், வல்ல ரஹ்மானின் கருணையால் நாங்கள் மனம் உவந்து முழு உதவி செய்ய தயாராக இருகின்றோம் ! இன்ஷா அல்லாஹ்!

மர்ஹூம் கதீப் ஹாமித் வருடாந்திர நினைவுப் பரிசு
நம் கஸ்வா அமைப்பிற்கு தூணாக நின்று அடித்தளமிட்டவரும், நம் அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான எங்களின் அன்பு நண்பர் மர்ஹூம் கதீப் ஹாமித் (அல்லாஹ், அவர்களின் மீது மன்னிப்பையும் ரஹ்மத்தையும் வழங்கி, அவரின் கபூரை பிரகாசமாக்கி வைப்பானாக) அவர்களின் நினைவாக கடந்த 10 வருடங்களாக (2002 ம் ஆண்டு முதல்) நம் ஊர் பள்ளிகூடத்தில் படித்து, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவியருக்கு ரொக்க பணம் ரூ5000 மற்றும் கேடயமும் வழங்கி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! (அவரது ஹக்க்கில் நீங்கள் யாவரும் துஆ செய்யும்மாறு வேண்டுகிறோம்!)

முடிவுரை!
எங்களுக்கு இந்த அறிய சேவையை செய்ய சக்தி தந்த இறைவனுக்கு, நாங்கள் யாவரும் சிரந்தாழ்த்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்! இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் இதை விடவும் இன்னும் அதிகமாக உள்ளத்தூயமையோடு சேவை செய்ய வாய்ப்பு தருவானாக! ஆமீன்!

நம் உயிரினும் மேலான நபி கண்மணி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ் நாளில் பயணம் செய்த புனித ஒட்டகத்தின் பெயரும் "கஸ்வா" என்று அறியும் போது ஏற்படும் சந்தோஷத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றோம்.

நம் ஊரில் இருந்து கொண்டும், உலகின் பல்வேறு திசைகளில் இருந்து கொண்டும், நம் ஊருக்கும், சமுதாயத்திற்கும் நல்ல முறையில் பல உதவிகள் புரிந்து வரும் ஒவ்வொரு நல மன்றதிற்க்காகவும் நாங்கள் துஆ செய்கின்றோம். யா அல்லாஹ்! எங்கள் யாவரின் பிழைகளை மன்னிப்பாயாக! எங்களுக்கு கடனும், நோயும் இல்லாத வாழ்வை தந்தருள்வாயாக! என்றும் மன நிம்மதியையும் அமைதியும் தந்து ஈருலகிலும் எங்களுக்கு வெற்றியை வழங்கி உன்னுடைய நல்லடியார் கூட்டத்தில் எங்களையும் சேர்ப்பாயாக! ஆமீன்!

எங்கள் அமைப்பை பற்றிய உங்கள் மேலான கருத்துகளையும், ஆலோசனைகளும் நாங்கள் எதிர்பார்கின்றோம். வஸ்ஸலாமு அலைக்கும்.

Correspondence Address in Hong Kong
KSWA
T.S.T. P.O. Box : 95361
Kowloon, Hong Kong.
Email : info@kswa.org kswa98@gmail.com
Web : http://www.kswa.org

Correspondence details in India
Janab M.L. Haroon Rasheed : Cell # : 98421 94621
Janab M.I. Yusuf Hafiz : Cell # : 96556 58153


இவ்வாறு ஹாங்காங் கஸ்வா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved