 |  |
செய்தி எண் (ID #) 8477 | |  | ஞாயிறு, மே 20, 2012 | ஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் மௌலானா ஆசாத் கோப்பைக்கான கால்பந்து போட்டி! காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சிறப்பு பக்கம்!! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3144 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் ஏற்பாட்டில் மே 9 முதல் - மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பைக்கான - 47 வது அகில இந்திய கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் மே 27 அன்று நிறைவுபெறும்.
இப்போட்டிகளை முன்னிட்டு காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சிறப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் கீழ்க்காணும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
1. நேரடி ஒளிபரப்புக்கான படங்கள் மற்றும் வர்ணனை ஐக்கிய விளையாட்டு சங்கம் மூலம் பெறப்படுகிறது. அது தவிர - இப்பக்கத்தில், 3 நிமிடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் ஆட்ட நிலவர செய்தியும், 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் ஒளிபரப்பினை காணும் வாசகர்களின் கருத்துக்களும் இடம் பெறுகின்றன.
2. போட்டிகள் கால அட்டவணை தனி பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
3. போட்டிகளின் முடிவுகள் குறித்த தகவல்களுக்கு தனி பக்கம் வழங்கப்பட்டுள்ளது
4. ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பக்கத்தில் எளிதாக காண சிறப்பு பக்கத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
5. சங்க நிர்வாகிகள் மற்றும் ஏற்பாட்டு குழுவினர் விபரம் தனி பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
6. ஐக்கிய விளையாட்டு சங்கம் குறித்த குறிப்பு, ஒவ்வொரு நாளும் ஆட்டங்களின் துவக்கத்தில் ஒலிபரப்படும் இசை குறித்த தகவல், வெளிநாடுகளில் வாழ்வோர் டிக்கெட்கள் பெற அணுகவேண்டிய பொறுப்பாளர்கள் விபரம் ஆகியவை தகவல்கள் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
7. இப்போட்டிகள் குறித்து வாசகர் கருத்துக்கள்/ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள்/கோரிக்கைகள் ஆகியவைகளை விருந்தினர் பக்கத்தில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
 |
|
|