தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் காயல்பட்டின நகராட்சியில் - 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த டெண்டர் கடந்த மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட அந்த டெண்டர் அறிவிப்பில் பல விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த டெண்டர் அறிவிப்பு குறித்து நகர்மன்றத் தலைவர் - அலுவலர்களிடம் விளக்கம் கேட்டிருந்ததாக தெரிகிறது. etender வெளியிடுவதற்கான Digital Token நகராட்சியிடம் இல்லை என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். Digital Token பெற விண்ணப்பம் செய்யும்படியும், அதுவரை டெண்டரை ஒத்திவைக்கவும் நகர்மன்றத் தலைவர் கூறியிருந்தார். அதன்படி மே 3 க்கு டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட புதிய தேதிக்கு முன்னரும் - Digital Token கிடைக்கவில்லை என அலுவலர்கள் தெரிவித்ததால் - டெண்டரை மீண்டும் தள்ளிவைக்க நகர்மன்றத் தலைவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் - மே 23 க்கு இந்த டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இந்த டெண்டர் அறிவிப்பில் - ரூ.24,75,000 மதிப்பிலான டம்பர் பிளேசர் தொட்டி 45 எண்ணம் பொருட்கள் வாங்குதல் குறித்த eTender அறிவிப்பு தமிழக அரசின் etender இணையதளமான https://tntenders.gov.in -ல் மே 17 அன்று வெளியாகிவுள்ளது.
மீதி இரு பொருட்களான டெண்டர் அறிவிப்பு -
1. டம்பர் பிளேசர் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.8,50,000
2. புஷ்காட் 48 எண்ணம் வாங்குதல் - ரூ.7,08,000
- நகராட்சி நிர்வாகத்துறையின் டெண்டர் இணையத்தளத்தில் (http://municipality.tn.gov.in/tenders) வெளியாகியுள்ளன. இறுதி தேதியில் (மே 23) எந்த மாற்றமும் இல்லை.
|