கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியாக அமைக்கக் கோருவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில், 16.05.2012 புதன்கிழமை இரவு 08.30 மணிக்கு, காக்கும் கரங்கள் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் மாடியில் நடைபெற்றது.
ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், தமிழக அரசின் நடப்பு அறிவிப்பின் படி கிழக்கு கடற்கரை சாலை காயல்பட்டினத்தைத் தவிர்த்து அமையவுள்ளமை, அதன் சாதக-பாதகங்கள், காயல்பட்டினம் வழியே இச்சாலை அமைக்கப்பட்டால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் என பல அம்சங்களை உள்ளடக்கி, வி.ஐ.புகாரீ உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, ஜே.ஏ.லரீஃப், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அதன் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், நகர தேமுதிக செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியே அமைக்கக் கோருவது குறித்து பொதுநல ஆர்வலர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு வி.ஐ.புகாரீ, காயல் அமானுல்லாஹ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
கூட்டத்தின் நிறைவில், கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினத்தை உள்ளடக்கி அமைக்கக் கோருவதென்றும், இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக,
வி.ஐ.புகாரீ,
எம்.ஜே.செய்யித் இப்றாஹீம்,
ஜே.ஏ.லரீஃப்,
எம்.எல்.ஷேக்னா லெப்பை,
எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ்,
முஹம்மத் முஹ்யித்தீன்
ஆகியோரடங்கிய தற்காலிகக் குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழுவினர் விரைவில் கலந்தாலோசித்து, பரவலாக ஒரு குழுவை அமைத்து, செயல்திட்டம் வகுத்து செயல்பட கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகரின் பொதுநல அமைப்புகளது பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்தை உள்ளடக்கி கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கக் கோரும் வரைபடங்கள் பின்வருமாறு:-
|