வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் (கே.பி.எல்.) என்ற பெயரில் ஆண்டுதோறும் க்ரிக்கெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் க்ரிக்கெட் போட்டிகள் காயல்பட்டினம் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் 18.05.2012 அன்று (நேற்று) துவங்கியது.
இப்போட்டித் தொடரில் க்ரீனிஷ் கவுன்டி, ஃபை ஸ்கை பாய்ஸ், காலரி பேர்ட்ஸ், காயல் ராக்கர்ஸ், வாவு வாரியர்ஸ், ஃபைனல் சேலஞ்சர்ஸ், மஹேந்திரா பவர்ஆல் மற்றும் காயல் டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் முறையில் விளையாட உள்ளன. வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காயல்பட்டினத்தின் தலைசிறந்த வீரர்கள் இவ்வணிகளின் கீழ் விளையாடுகின்றனர்.
நேற்று ஒரு போட்டி நடத்தப்பட்டது. இன்று 3 போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
போட்டி எண் 2: மோதிய அணிகள்:- காயல் ராக்கர்ஸ் - காயல் டைகர்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடிய காயல் டைகர்ஸ் அணி 2 வீரர்கள் இழப்பிற்கு 115 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் அப்துல் ஹமீத் 74 ஓட்டங்களையும், அபு 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
அடுத்து ஆடிய காயல் ராக்கர்ஸ் அணி ஆட்ட நிறைவில், 2 வீரர்கள் இழப்பிற்கு 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். அந்த அணியின் உமர் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இம்ரான், எம்.எஸ்.முஹ்யித்தீன் ஆகியோர் தலா 9 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் ஹமீத் சீனியர், ஹமீத் ஜூனியர் ஆகியோர் தலா ஒரு வீரரை வீழ்த்தினர்.
இப்போட்டியில், காயல் டைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டி எண் 3: மோதிய அணிகள்:- வாவு வாரியர்ஸ் - ஃபைனல் சேலஞ்சர்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடிய வாவு வாரியர்ஸ் அணி 4 வீரர்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் சித்தீக் 23 ஓட்டங்கள், வாவு ஷாஹுல் ஹமீத், ஹுஸைன் ஆகியோர் தலா 17 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் லத்தீஃப் இரண்டு வீரர்களையும், ஷேக் 1 வீரரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து ஆடிய ஃபைனல் சேலஞ்சர் அணி 4 வீரர்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் எம்.பி.எஸ்.ஷேக் 15 ஓட்டங்களையும், லத்தீஃப் 24 ஓட்டங்களையும், மீராஸாஹிப் 18 ஓட்டங்களையும் பெற்றனர். எதிரணியின் சித்தீக் 3 வீரர்களையும், மூஸா ஒரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
இப்போட்டியில் வாவு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டி எண் 4: மோதிய அணிகள்:- க்ரீனிஷ் கவுண்ட்டி - மஹிந்திரா பவர் ஆல்
முதலில் துடுப்பெடுத்தாடிய க்ரீனிஷ் கவுண்ட்டி அணி 2 வீரர்களை இழந்து, 115 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஷாஹுல் 18, ரியாஸ் 10, மொகுதூம் ஆட்டமிழக்காமல் 44, அஸார் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் ஷமீம், அம்மார் ஆகியோர் தலா ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து ஆடிய மஹிந்திரா பவர்ஆல் அணி, 3 வீரர்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் இம்ரான் ஜூனியர் 21, பஷீர் 34, ஷமீம் 22 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் செய்யித், ஹஸன் ஆகியோர் தலா ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்தனர்.
இப்போட்டியில், க்ரீனிஷ் கவுண்ட்டி அணி வெற்றி பெற்றது.
தகவல்:
M.M.ஷாஹுல் ஹமீத். |