எதிர்பாராத மருத்துவச் செலவினங்களுக்காக எதிர்பார்த்திருக்கும் - காயல்பட்டினத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்குவதற்காக கடந்த 29.01.2012 அன்று துவக்கப்பட்ட “மைக்ரோ காயல்” இணையதளத்திற்கு தற்போது வயது 100 நாட்களாகிறது.
இதனையொட்டி, “மைக்ரோ காயல்” இணையதள குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை பின்வருமாறு:-
மைக்ரோகாயல் 100 நாட்கள்!! ரூ.1,72,000 நிதி சேகரித்து பயனாளிகளுக்கு உதவி!
மைக்ரோ காயல் (MicroKayal.com) என்ற பெயரில் ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் ரிதா ஃபவுண்டேசன் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்பினர் இணைந்து நகரில் செயல் படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ், தற்பொழுது நூறு நாட்களை கடந்து அல்லாஹ்வின் பேரருளாலும் தங்களை போன்ற காயல் நல்லுள்ளங்களின் பேராதரவாலும் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் இதனின் செயல்பாடுகளை விவரிக்கும் வண்ணம் ஒரு சிறிய ரிப்போர்ட்.
*** உறுப்பினர்கள் எண்ணிக்கை – 172 (Website) , 88 (Facebook Page)
*** இது வரை பயன்பெற்றோர் எண்ணிக்கை - 6
*** மொத்த நிதியுதவி - ரூ.1,72,000
*** உறுப்பினர்கள் சார்ந்த நாடுகள் எண்ணிக்கை - 14
*** உறுப்பினர்கள் சார்ந்த நகரங்கள் எண்ணிக்கை - 36
இதுவரை தங்களை மைக்ரோகாயலில் இணைத்து கொள்ளாதோர் http://microkayal.com/UserLogin.aspx?page=register என்ற இணைப்பைச் சொடுக்கி ரெஜிஸ்தர் செய்து கொள்ளலாம். ரெஜிஸ்தர் செய்து கொண்டவர்கள் மட்டும்தான் மைக்ரோகாயலின் விண்ணபங்களை காண முடியும்.
அதுபோல தினமும் மைக்ரோகாயலின் செய்திகளை, அதாவது விண்ணபங்களின் தற்போதைய நிலவரம், எதிர்பார்க்கப்பெற்றுள்ள தொகை , கிடைத்துள்ள தொகை போன்ற விபரங்களை கீழ்க்கண்ட பேஸ்புக் சமூக இணையதளத்தில், http://www.facebook.com/pages/MicroKayal/135806913209367 என்ற பக்கத்திலும் காணலாம். விண்ணப்பதாரரின் பெயர், விலாசம், போன் நம்பர் போன்றவை பேஸ்புக் உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்படுவது இல்லை.
இவ்வாறு “மைக்ரோ காயல்” இணையதள குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
J.செய்யித் ஹஸன்,
அறங்காவலர்,
ரிதா ஃபவுண்டேஷன். |