நகர்மன்றத்தளைவிக்கும் A.I.A.D.M.K நிர்வாகிகளுக்கும் ஓர் நிமிடம்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[16 May 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18878
அஸ்ஸலாமு அழைக்கும்.
நகர்மன்ற தலைவி அவர்களே!
தங்களுக்குள் நடப்பு அரசாங்க அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால் கடந்த நகர்மன்றதலைவி ஜனாபா. வகிதா அவர்களின் அனுபவமும் இதே போன்று சுயேச்சையாக மக்களால் தேர்ந்டுக்கப்பட்டு இதே A.I.A.D.M.K அரசால் கவரப்பட்டு சேர்ந்து காயல் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்றும் அவர்களின் ஆலோசனைகளும் மனதில் வைப்பது நன்று.
A.I.A.D.M.K. நிர்வாகிகளே!
தாங்கள் சுயேச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொறுப்பில் இருக்கும் போது முன்பு சகோதரி வகிதா அவர்களின் போது தவறு செய்தது போல் தற்போதும் மீண்டும் அதுபோல் செய்ய சிறிது கூட நினைத்து விடாதீர்கள்.அது ஒரு பயனும் கண்டிப்பாக தராது.
தங்கள் கட்சிகளோ ஓர் இந்திய தேசியளவில் மாபெரும் கட்சி.நல்ல பல தலைவர்களையும் கட்டுபாடான அம்மாவின் தலைமையும் கொண்ட கட்சி. நீங்கள் காயல் மக்களின் மனதில் இடம்பெற இந்த மிகச்சிறிய ஆபிதா அவர்கள் மூலம் தான் முடியும் என்று தப்புகணக்கு போட்டிடாமல் தாங்கள் இன்னகர்மன்ற தலைவியை சுயேட்சையாக வைத்துகொண்டே அவர்களுக்கு தங்களின் தனிப்பட்ட அனுபவம் திறமைகளை கொண்டு தங்கள் தலைமைகளைத் தொடர்புக்கொண்டு நமது காயலின் அனைத்து மிக மிக அவசியமான அவசரமான திட்டங்களை தனித்து நின்று பெற்றும், பெறவும் நகர்மன்ற தலைவிக்கு உதவி செய்தும் நிருபித்தால் காயல் மக்கள் ஆபிதா அவர்களையோ, அரசியல் கட்சிகளையோ பாராமல் யார் எப்படி உதவி செய்தார்கள் என்று மட்டும் பார்த்து அவர்களை தங்கள் மனதில் நிறுத்தி ஆதரிப்பார்கள் என்பதில் திட்டமாக எந்த சந்தேகமும் இல்லை!
வெறும் விளக்ககூட்டகளை போட்டுக்கொண்டு காலம் மற்றும் நிதிகளை வீண்விரயம் செய்யாமல் நமது நகரமன்றத்தின் அனைத்து திட்டங்களை ஒவ்வொன்றாக முடித்து சாதனைகூட்டன்களை போட்டு அசத்துங்கள் அன்பர்களே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross