உருப்படியான செயல் திட்டங்கள்....வாழ்த்துக்கள்...!!! posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[16 May 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18885
“இச் செயல் இவன் முடிக்கும் என ஆய்ந்து அச் செயல் அவன்கன் விடல்” எனும் வள்ளுவனின் குறள் நெறிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்...!!!
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றாலும் அதை மட்டும் கற்று அடுத்த மாநிலத்தில் கால் வைக்கும் போது பட்டிக்காட்டான் மிட்டய் கடையைப் பார்ப்பது போல் பிற மொழி தெரியாமல் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் பேந்தப் பேந்த முழிக்கும் நம்மவர் நிலை திண்டாட்டம் தான். படித்த பட்டதாரிகள் கூட அயல்நாட்டிற்கு வந்து ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் அல்லோலப்படுவதைக் கண்டு பல முறை ஆதங்கப்பட்டுள்ளேன். ஹிந்தி தினிப்பை நாம் ஏற்காவிடினும் ஹிந்தி படிப்பதை நாம் தடுக்கவோ, தவிர்க்கவோ கூடாது. பிற மொழிகளில் புலமை இருந்தால் எங்கும் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். மொழிகள் யாவும் இறைவனின் அருட்கொடைகள் தாம்!
ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு உரையாடி தன் கருத்துக்களைப் பறிமாற உதவும் பாலம் மொழி! உலக மொழிகள் அனைத்தும் உயந்தவைகள் தாம். இதைக் கற்பதால் நமக்கு இழிவுமில்லை! நம் தாய் மொழிக்கு அழிவுமில்லை! நல்லதோர் முடிவை அபூதாபீ நல மன்றம் எடுத்துள்ளது. மேலும் மருத்துவம்,மற்றும் நோய்களுக்கான விழிப்புணர்வுக்கு கையடக்க நூல், துண்டு பிரசுரம் ஆகியவை நல்ல பயனைத் தரும்.
என் இனிய நண்பன் ஏ.ஆர். ரிபாய் மதினாவிலும் சரி ஜித்தாவிலும் சரி, ஏன்? மக்கவிலும் கூட நமதூர் நலனுக்காக அயராது பாடுபடக்கூடியவர். அழகான கவிதைகள் எழுதி அதை என்னிடம் பல முறை வாசித்துக் காட்டுவார்.பொது நல விரும்பி, நான் அவரோடு கழித்த காலங்களை மறக்க முடியாது. இது ஓர் இனிய கனாக் காலம்! மொத்தத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
குசும்பு:
மச்சான் அபூ மதினாவில் நம்ம ரூம்மெட்டாக இருந்து கலக்கியது போதாதுன்னு இப்பொ அதுவும் நீ இருக்கும் அபூதாபியையும் ஒரு வழி பண்ணுறதுக்கு வந்துட்டாரா? இப்பவும் பிரட்,ஜாம்,பட்டர்,சவுதியா மில்க்ன்னு ஸ்டாக் வெச்சிருக்காரா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross