இந்த ஒலிநாடா எனக்குள் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை!
காரணம், இவர்களை எப்படியும் வழிகேட்டில் ஆக்கிவிட வேண்டும்
என்று ஆசைப்பட்டவர்கள், ஒரு சில பணக்காரர்களும், அரசியல்
வாதிகளும்தான். இப்படிப்பட்டவர்களை, பொதுமக்களே கிளர்ந்து
முற்றுகை இடப்போகும் காலம், இறையருளால் வெகுவிரைவில்
ஏற்படும்.
நான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவது எடுத்தோம்,
கவிழ்த்தோம் என்று கருத்து விதைக்கும் அபுதாபி சகோதரர்
சுலைமான் போன்றவர்களை எண்ணும்போதுதான்.
யார் வெட்கப்பட வேண்டும்? பல்வேறு இழப்புகளுக்கு மத்தியில்
நகருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக இயக்கம்
ஆரம்பித்து, தேர்தல் காலத்தில் ஊருக்கு உழைத்து, உண்மையை
நிலைநிறுத்தப் பாடுபட்டவர்களா? அல்லது எனது ஊரும்,
ஊர்மக்களும் எப்படிப்போனால் எனக்கென்ன என்று தன்னலமாய்
வாளாவிருந்தவர்களா? சிந்தித்து எழுதுங்கள் தோழர்களே!
சில பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் போடும் கூத்துக்களை ஊடகங்களும், நல்லவர்களும் ஆதாரங்களுடன்
பகிரங்கமாக வெளிப்படுத்தியபோது வாய் மூடி மௌனியாக
இருந்து விட்டு, இப்போது மட்டும் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய காலம் விரைவில் வரும்.
பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகளுக்கு
அஞ்சாமல் தொடர்ந்து போராடும் சகோதரி ஆபிதா மற்றும்
அவருக்குத் துணைநிற்கும் ஹாஜி.லுக்மான் காக்கா, சகோதரி
முத்து ஹாஜரா போன்றவர்களுக்கு வல்ல இறைவன் வலிமையைத் தருவானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross