சகோதரர் லுக்மான் அவர்கள் சொன்னது போல் தலைவி நடந்து கொள்வாரே யானால் கண்டிப்பாக வருந்ததக்கது .ஒரு சமபவத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மறைந்த நமதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி VMS .லெப்பை மாமா அவர்கள் ஒரு பழுத்த காங்கிரஸ் காரரும் கூட .மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி யோடு கூட தொடர்பு உள்ளவர் அப்படி பட்ட அருங்குனாளர் விளக்கு மாமா அவர்கள் 1989 ஆம் ஆண்டு தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்முதலமைச்சராக நமதூருக்கு வருகை தந்த போது காயல் மாநகர் DMK சார்பில் வரவேற்பு கொடுக்கபட்டது மிகப்பெரிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர், காங்கிரஸ் DMK பரம விரோதிகளாக
இருந்த நேரத்தில் கூட DMK நிருவாகிகளோடு கலந்து ஆலோசித்து நமதூர் நல விசயமாக ஊர் நலம் சம்பந்தமாக கலைஞ்சரை சந்தித்து DMK மேடையில் ஏறி பொன்னாடை போர்த்தி மனு கொடுத்தார்கள்.
மற்றுமல்ல
எந்த விஷயம் ஆனாலும் நமதூர் முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை பெற்றார்கள் .தன்னுடைய சொந்த காரிலே தான் அரசு அலுவலகம் செல்வது வழக்கம் . நானும் தூத்துக்குடி கலைக்டர் திரு ஆறுமுகம் அவர்களை சந்திக்க சில முறை சென்று இருகிறேன் ( அப்போது நான் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் )என்ன பெருந்தன்மை பெரியவர் சிறியவர் என்று பாராமல் அரவணைத்து கலந்து ஆலோசித்து செயல் பட்ட VMS விளக்கு மாமாவை இந்நேரம் நினைத்து பார்கிறேன் .
அடுத்து அதிகாரி களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் விரட்டி வேலை வாங்கிய எனது பாட்டனார் பாவலர் அப்பா அவர்கள் பேரூராட்சி தலைவர் ஆக இருந்த சமயம் நடந்த சம்பவத்தை பெரியவர் ஜகரிய அப்பா அவர்கள் என்னிடம் சொன்னது. பேரூராட்சி தலைவராக பாவலர் அப்பா அவர்கள் இருந்த போது குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் திரு பத்மநாபன் அவர்கள் திருநெல்வேலியில் கலந்துரையாடல் நடத்தினார் . நமதூர் தண்ணீர் பிறர்சினை பற்றி பாவலர் அப்பா அவர்கள் பேசிய போது இடை மறித்து கலைக்டர் காயல் பட்டினம் பேரூராட்சி
பாக்கி நிறைய அரசுக்கு தர வேண்டும் .அதை உடன் செலுத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியபோது இபோது கூட்டப்பட்ட கூட்டம் தண்ணீர் பிறர்சினை பற்றி தான் அதற்காக மட்டும் தான் அரசு இந்த கூட்டத்தை கூட சொல்லியுள்ளது தண்ணீர் தர முடியுமா முடியாதா என்று கோபமாக கூறி யுடன் திரு பத்மநாபன் அவர்கள் பாவலர் அப்பா விடம் மன்னிப்பு கேட்டு உடனே அவன செய்யுமாறு கட்டளை இட்டார்கள்.
இப்படி பல்வேறு பட்ட சம்பவங்கள் கூறினார்கள். அது போன்று MKT அப்பா, வாவு செயத் அப்துல் ரஹ்மான், போன்ற பெரியவர்கள் போன்று நடப்பு தலைவியும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட உறுப்பினர்கள் பொது நல மன்றங்கள் மற்றும் நமதூர் பெரியோர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்டும் என்ற பாடல் வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன்
..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross