என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு அன்னைக்கே எனக்கு சந்தேகம் வந்திச்சு! அடுத்த செய்தி தன்னிலை விளக்கம்ன்னு வந்ததும் அது உறுதியாயிடுச்சு.
லுக்மான் அவர்களே! தாங்கள் கவுன்சிலருக்காக போட்டியிட்ட போதே சத்தியம், சாத்தியம்,என அறிக்கை வெளியிட்டு தங்களுக்கென்று ஒரு தனி இமேஜை உருவாக்கினீர்கள். உண்மைதான்! உங்களை யாரும் லஞ்சம் வாங்குபவர் என்றோ? ஏமாற்றுப் பேர்வழி என்றோ இதுவரை சொன்னதில்லை! தாங்களும் அப்படிப் பட்டவர் இல்லை!
இரு கவுன்சிலர்கள் ஈனத்தனமாக வருமானம் ஈட்டுவதைப் பற்றி கலந்துரையாடிய கருமாந்தரம் இத்தளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டபோது சம்பந்தா சம்பந்தமில்லாமெ தாங்களே முன் வந்து நான் நல்லவன், நாணயமானவன், முஆபலாவுக்கு வரத் தயார்ன்னு கருத்து எழுதினீங்க.
இது எப்படி இருக்குன்னா? பரீட்சையிலெ பிட் அடிச்ச மாணவனை வாத்தியார் வகுப்பில் கண்டிக்கும்போது சம்பந்தமே இல்லாத ஒரு மாணவன் தானாகவே முந்திக்கொண்டு (தங்களைப் போலவே) “சார்....நான் ரெம்ப நல்லவன் சார். பிட்டே அடிக்க மாட்டேன். அல்லாஹ் மேலெ சத்தியம் வேணாலும் பண்ணுறேன் சார்”ன்னு சொல்லுவதைப் போல் உள்ளது. இதைக் கேட்ட வாத்தியாருக்கு அந்த மாணவன் மீது எந்த விதமான நம்பிக்கை வருமோ? அந்த விதமான நம்பிக்கைதான் இப்ப உங்க மேலெ எங்களுக்கு வந்திருக்கு.
நுழலும் தன் வாயால் கெடும்,
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி,
எங்க அப்பன் குதருக்குள்லே இல்லெ
என்பது போன்ற இப்பழமொழிகளுக்கேற்ப தாங்கள் தற்போது நடந்து கொண்ட விதம், எங்கே தங்களின் அந்த இமேஜைப் பாதிச்சிடுமோ?ன்னு பயமாயிருக்கு!
அனுபவமின்மை, அனுசரணையின்மை, ஆளுமைத் திறன் இன்மை, பிறர் சொல் கேளாமை, தன்னிச்சை, திடீர் முடிவு, இப்படி பல விதமான அர்ச்சனைப் பூக்களை தலைவி மீது அள்ளி வீசும் தங்களிடம் இத்தளத்தின் அறிவுஜீவிகளான கருத்தாளர்கள் அற்புதமான பல கேள்விக் கனைகளைத் தொடுத்துள்ளார்கள். அத்தனைக்கும் பதில் சொல்ல தாங்கள் கடமை பட்டுள்ளீர்கள்.
நீங்க சொல்லுறதைக் கேட்டு நடக்கணும்,
உங்களை அனுசரிச்சு அதாங்க வளஞ்சு கொடுத்து போகணும்,
கூட்டம் போடச் சொன்னா போடணும்,
அதில் நீங்க சொன்ன...ஸாரி.. சொல்லிக் கொடுத்த கேள்விகளைத்தான் தலைவி கேட்கணும்,
அதிகாரிகளை திட்ட மாட்டிருக்காங்க,
மெம்பரைத்தான் வாங்கு வாங்குண்னு வாங்குறாங்க,
இது போன்ற சப்பைக் குற்றச்சாட்டுகளைத் தலைமைக்கு தாங்கள் வைக்கும்போது, உங்க சொல் கேட்டுத்தான் நடக்கணும்னா அப்புறம் தலைவி எதற்கு? தலைமை எதற்கு?
நகர்மன்றத் தலைவி மீது ஏதேனும் ஊழல் குற்ச்சாட்டுகள் அல்லது வீண் விரயங்கள் இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
பொதுவாகத் தமிழ் நாட்டிலுள்ள நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் உத்தம நபிகளாரின் திண்னைத் தோழர்கள் அல்ல! சத்திய வழியில் சற்றும் சருகாமல் நடப்பதற்கு! ஆபிதா அவர்களின் ஆணித்தரமான சில முடிவுகளால் மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கும் சில உறுப்பினர்களும், சில ஊள்ளூர் கொடைவள்ளல்களும், ஊழல் நடத்த வழியின்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை!
உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு மரியாதை, எதிர்பார்ப்பு, இவைகள் ஏராளம்! எனவே, பிறர் பொறுப்புகளைக் குறை கூறும் முன் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தாங்கள் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் துணை நிற்பான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross