Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[19 June 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19453
காயல் வலைதலங்களில் நகராட்சி தலைவியை எதிர்த்தும், ஆதரித்தும் பல விமர்சனங்கள் படு வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக நாம் தலைவியை பாராட்டியே ஆக வேண்டும். ஏன்?
சென்ற தலைவர் வாவு அப்துர் ரஹ்மான் ஹாஜியார் ஆரம்பத்தில் கமிஷன் வாங்கும் கவுன்சிலர்கள் விசயத்தில் சற்று உஷாரகவே இருந்தார்கள். ஆனால் சில ககவினர் நகர சபையை நடத்த விட மாட்டோம், ஒத்துழைக்க மாட்டோம் என்று மிரட்டியதாக செய்தி வெளியானது. அதன் பிறகு வாவு ஹாஜியார், தொலைந்து போங்க என்று எதையும் கண்டு கொள்ளாமல், தனது சொந்த காசை செலவழித்து ஏதோ சில நன்மைகள் செய்தார். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு செக் மோசடி வரை சென்று நம் நகராட்சி நாறி போனது.
அதற்கு முந்திய தலைவி வஹிதா அவர்களை, ககவினரும், கட்சிகாரர்களும் மிரட்டி அதிமுகவில் இணைத்தனர்.
ஆனால் இன்றைய தலைவிக்கு மேலே கூறிய தலைவர்களுக்கு ஏற்பட்ட அதே மிரட்டல்கள் இரண்டும் ஒரு சேர்ந்து தாக்கினாலும், அதை தைரியமாக எதிர்கொள்கிறார்கள்.
அந்த தைரியத்திற்காக நாம் பாராட்டித்தானே ஆக வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross