Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byVilack SMA (Yi Li , Hetang)[24 June 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 19575
மிகவும் நிதானமாக தயாரிக்கப்பட்ட ஒரு " கட்டுரை " . இதற்கு , IAS / IPS ஆபீசர்கள்போல் எழுதி இருக்கிறார் என்றும் , தாய்ப்பாலுக்கு பதில் ஞானப்பால் குடித்து வளர்ந்திருக்கிறார் என்று ஒரு விமர்சனம் . " ஆட்டம் க்ளோஸ்! லாங் விசில் ஊதிட்டாங்க...ஸார் " என்று சேரிப்பகுதியில் பேசுவது போன்ற விமர்சனத்தில் ஒருவர் .
மன்ற உறுப்பினர் ஒருவரே இந்த தலைவியின்மீது குற்றச்சாட்டுகளை கூறும்போது , தலைவி அதற்கு உடனடியாக மறுப்போ , விளக்கமோ அளித்திருக்க வேண்டும் . மாறாக , தங்கைக்காக அங்கு சென்றேன் , உம்மாவுக்காக சும்மா இருந்தேன் என்று சொன்னால் எப்படி ?
ஆக , இந்த கட்டுரை , ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டு , கையெழுத்துக்காக காத்திருந்ததுபோல்தான் தெரிகிறது .
மெகா பெரியவருக்கு ஒரு வேண்டுகோள் . இப்போது நீங்கள் விழிப்படைந்து விட்டதாக கூறுகிறீர்கள் . இப்போதுகூட ஒன்றும் குறையவில்லை . தேர்தலின்போது நீங்கள் போட்ட வழக்கின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வழக்கை வாபஸ் வாங்கி விட்டீர்களா ? அல்லது தோற்று விட்டீர்களா ? அல்லது நம் ஆதரவு தலைவிதான் வந்தாச்சே , அதனால் கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்று எண்ணிவிட்டீர்களா ? மேலும் உங்கள் மெகா , தேர்தல் வழிகாட்டுதல் என்பதற்காகத்தான் என்ற நீங்கள் , இப்போது ஊழலை ஒழிப்பேன் , பெருச்சாளியை விரட்டுவேன் என்கிறீர்கள் . என்ன கோட்பாடோ , கொள்கையோ !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross