குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிறது. posted bySalai Sheikh Saleem (Dubai)[24 June 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19580
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம், அறிவார்ந்த விவாதம்
செய்யக்கூடாது. .அப்படி செய்தால், அவர்கள் உன்னையும் அவர்களது தரத்திற்கு இழுத்து வந்து முட்டாளாக்கி,
தோற்கடித்து விடுவார்கள். அந்த அடிப்படையில், நான் விளக்கு செய்யிது முஹம்மது அலி அவர்களுக்கு பதில் விளக்கம்
தருவதில்லை. நண்பர் அவர்களை நான் குறுகிய மனப்பான்மை உடையவர் என்று சொல்வதனை, அவரது
கருத்துக்கள் அனைத்தையும் வாசித்துப் பார்த்தால் புலனாகும். உதாரணத்திற்கு அவர் உதிர்த்த சில முத்துக்களை
நான் கீழே தருகிறேன்.
அ) கோடை நேரத்தில் யாரோ அரைக்கால் சட்டை அணிந்து வந்ததற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று, நமது கடற்கரையின் கண்ணியத்தை காக்கும் நல்லெண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை பயனாளிகள் சங்கத்தை, இவர் கேவலமாக விமர்சிப்பதை பாருங்கள். கருத்து எண்.5922
ஆ) பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க பரிசளிக்கும், ஹாங்காங் கஸ்வா அமைப்பை, விளம்பர பிரியர்கள்
என்று விமர்சிக்கும் இவரது இழிவான எண்ணத்தை பாருங்கள். கருத்து எண். 5946
இ) பிறப்பால் நமது ஊரை சேர்ந்த பெண் மணியை, வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று . வரம்பு மீறி உளருவதைப் பாருங்கள். கருத்து எண். 8376
ஈ) துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்தது தலைவியின் விழிப்புணர்வின்மை என்று, ஜனநாயாக
உரிமையை, காழ்ப்புணர்ச்சியுடன் சாடும் இவரது மடமையைப் பாருங்கள். கருத்து எண்.12501
உ) நகராட்சித் தேர்தலில், ஜூம்ஆ பள்ளி கத்தீப்களின் சம்மதத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையை கிண்டல்
செய்யும் இந்த மார்க்க மேதையின் மமதையைப் பாருங்கள். கருத்து எண்.8252
இவரைப் பற்றி எல்லோரும் அறிந்ததுதானே என்று நீங்கள் நினைத்தாலும், புதிதாக இந்த தளத்தை வாசிக்கும்
நேயர்களுக்கும், இவரது குறுகிய மற்றும் எதிர்மறை எண்ணங்களை சுட்டிக்காட்டுவது அவசியம் என்று
கருதுகிறேன். இது போக இவர் கீழ்த்தரமாக மெகாவை விமர்சித்து எழுதிய வாசகங்கள் ஏராளம்! ஏராளம்!
சரி. இப்போது இவரது கேள்விகளுக்கு வருகிறேன். தலைவியின் விளக்க அறிக்கை வேண்டும் என்று கூவிய
இவர், அறிக்கை வந்த பிறகு சொல்வதைப் பார்த்தீர்களா? உம்மாவுக்கு சுகமில்லை, கம்மாவுக்கு சுகமில்லை
என்று தாமதம் ஏன் என்று கேட்கிறார்.
கடந்த ஆண்டு நமது நாயகம் (ஸல்) அவர்களின் புகழ்பாடும்
ரஹ்மத்துல் ஆலமீன் மாமன்றம் நடத்திய, யாருக்கும் இடையூறு இல்லாத, மாற்றுக் கருத்து உள்ள நண்பர்கள்
கூட விமர்சிக்காத மீலாது விழ மேடையை இகழ்ச்சியாக எழுதிய இவர், தனது வீட்டில் யாருக்கோ சுகமில்லை
என்றும், மாற்று வழிகள் நிறைந்த குத்துக்கள் தெருவுக்கு ஆம்புலன்ஸ் வண்டி வரமுடியவில்லை என்றும்
பொய்யாக எழுதி, இலங்கை சகோதரர் ஜமால் நானா அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, நாம்
அனைவரும் அறிந்ததே!
தனது உறவினருக்கு சுகமில்லை என்றதும் சீறிப்பாயும் இவர், அடுத்தவருக்கு என்றதும் ஏளனம் செய்யும் ,இழிநிலையைப் பாருங்கள். ஏன் நகர்மன்றத் தலைவர் பொறுப்பில் உள்ளவருக்கு
குடும்பமே இருக்கக் கூடாதா? குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லையே இவரிடம்.
மெகாவை இழிவுபடுத்த தேர்தல் நேரத்தில் காது கூசும் கெட்ட வார்த்தைகளோடு வெளியிடப்பட்ட, ஆடியோ
கிளிப் சமூக விரோதிகளை இதே தளத்தில் ஆதரித்து எழுதிய இவரது அறிவீனத்தை மறக்க முடியுமா?
மெகா தனது சொந்த செலவில் தொடுத்த நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதைக் குறித்து
உமக்கு ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? நீதிமன்ற நிலுவை வழக்குகள் குறித்து நாங்கள் விவரிக்க,
அதைக் குறித்தும் நீர் ஏதாவது உளற நாளை சட்ட சிக்கல் ஆகி விட்டால் யாருக்கு கஷ்டம்? DCW நமதூரில்
பல்வேறு நோய்கள் பரவக் காரணம் என்ற கருத்தாளர்களின் விவாதத்தின் போது, டெல்லியைச் சேர்ந்த
ஏதோ ஒரு பெண்மணிக்கு கேன்சர் வந்ததற்கும் DCW நிறுவனம்தான் காரணமா என்று கேள்வி கேட்ட
அதி மேதாவியாயிற்றே நீங்கள்!
நிறைவாக, ஒரு இயக்கத்தையோ அல்லது அமைப்பையோ வெளியில் இருந்து சுலபமாக விமர்சித்து
விடலாம்.ஆனால், அதன் உள்ளே இருந்து பார்த்தால்தான் அதன் சிரமங்கள் தெரியும். நீர் எழுதிய ஒரே ஒரு உருப்படியான கருத்து கருத்து எண் 9236 மாத்திரம்தான் என்று நினைக்கிறேன். (இன்னும் பல உருப்படியான கருத்துக்களை எழுதும் அளவுக்கு அல்லாஹ் தங்களுக்கு அறிவு முதிர்ச்சியையும், உடல் நலத்தையும் தந்தருள்வானாக, ஆமீன்.
அட்மின் அவர்களே! எனது பல்வேறு கருக்களை தள்ளிவிட்ட நீங்கள், ஆதாரத்துடன் நான் எழுதிய
இந்தக் கருத்தையாவது வெளியிட்டு, ஊடக தர்மத்தை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross