Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[24 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19581
18 உறுப்பினர்களின் பேச்சையும் தலைவி அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் அந்த 18 பெரும் தலைவியின் பகையாளிகள் அல்ல.
தலைவியின் தன்னுடைய நிலைப்பாடு சரியானதுதான் என்ற தீவிர தன்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை
தலைவிமேல் லுக்மான் அவர்கள் சொல்லும் குற்றசாட்டு எல்லோராலும் ஏற்றுகொள்ளும் இமயமலை அளவு போன்றதல்ல என்பது லுக்மான் அவர்கள் விளக்கத்திலேயே தெரிகிறது.
தலைவி அவர்களின் சுயநலத்தையோ,ஒருசிலருக்கு சாதகதன்மையையோ,சில பண முதலைகளின் பக்கம் சாய்ந்தோ ,ஊழல் ஊறிய செயலோ,அல்லது நமக்கு இவ்வளவு கிடைக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வளவுதான் கிடைக்கும் என்று சொல்லி தலைவியே ஊழல் பணத்தை பகிர்ந்தளித்தார் என்பன போன்ற ஈனசெயல் பட்டியலையோ தலைவியின் மீது சுமத்த தைரியம் உண்டா?
அல்லது நாங்கள் 18 பெரும் புண்ணிய புதல்வர்கள் ,
எந்த தேவைக்கும் ,ஆசைக்கும் அப்பாற்பட்டவர்கள், அப்படிபட்டவர்களிடத்தில் தலைவி தன் எண்ணத்தை திணிக்கிறார் என்கிறீர்களா?
நாங்கள் 18 பெரும் அப்பழுக்கற்ற யோக்கியர்கள் எங்கள் எண்ணப்படி தலைவி ஆட மறுக்கிறார் என்கிறீர்களா?
உங்கள் கூற்று வாதப்படி உண்மை என்று வைத்துகொண்டாலும்,ஆடியோவில் பேசிய கருப்பு ஆட்டைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லையே.அவரும் சேர்ந்து தானே 18 பேர்கள்.
தலைவியை தாக்க துணிந்த உங்களுக்கு அந்த கருப்பு ஆட்டை அடித்து விரட்ட துணிவில்லையே ஏன்?
அந்த கருப்பு ஆடு யாரென்று சகோதரர் முஸ்தாக் அவர்கள் உண்மையை "ஹக்கை" போட்டு உடைத்து விட்டார். அந்த "கருப்பு ஆடு "யாரென்று உங்கள் மனசாட்சிக்கு தெரியும். தெரியாததுபோல் நடிக்க வேண்டாம்.
நீங்கள் துணிந்து தோலுரித்து சொன்னால் அந்த
கருப்பாட்டிர்க்குறிய வார்டின் பாவப்பட்ட மக்களுக்கு ஒரு பாடமாக அமையும்!.
அந்த கருப்பு ஆடு எங்கிருந்து யாரால் எந்த சக்தியால் நிறுத்தப்பட்டு, நோட்டுகள் பறக்கவிட்டு ,வெற்றிபெற்று பின்பு டெண்டர் சம்பந்தமான பதவி வழங்கப்பட்டு அதிலிருந்து வந்து கொண்டிருக்கின்ற ஆதாயத்தை அனுபவிக்கும் அந்த கருப்பு ஆட்டை பற்றி அணுவளவும் கூட தெரியாது என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்ல முடியுமா லுக்மான் அவர்களே ?
சொல்ல மாட்டீர்கள்.உங்கள் உள்நோக்கம் குறிக்கோள் அந்த கருப்பு ஆட்டை பற்றியதல்ல.தலைவியை தகுதி இழக்க செய்வது ஒன்றேதான் உங்கள் லட்சியமாக இருக்கிறது.
உங்களை தூண்டிவிடும் சக்திகளும்,பெரிய அமைப்பு புண்ணியவான்களும் பின்னும் வலையில் நீங்களும் விழுந்து கொண்டே இருக்கிறீர்கள் என்பது தான் எங்களுக்கு கிடைக்கின்ற செய்தி.
அந்த கருப்பு ஆட்டின் களபணிக்கு கட்டுகளை அள்ளி வீசிய பெரும் புள்ளியின் கையாலாகிய "காயல்"அரசியல்வாதி தன் மகள், மருமகள் ,மருமகன் மற்றும் குடும்பத்தார் அனைவர்களையும் படைபோல் இறக்கி அப்பகுதி மக்களை மூளை சலவை செய்த சாதனைக்கு கிடைத்த சன்மான அறுவடை அந்த அரசியல் வாதிக்கு அவ்வப்போது அந்தரங்கமாக சென்று கொண்டிருக்கிறது .இது அரசியல் வாதிகுண்டான இலக்கணம், இதில் ஆச்சரியபடதேவை இல்லை
அப் பகுதி மக்கள் தான் பரிதாவதிற்க்குறியவர்கள்
இதில் ஏதும் எனக்கு தெரியாது,எனக்கு தெரிந்தது எல்லாம் தலைவி செய்த தவறு மட்டும் தான்.என்றும் சத்யம் செய்ய துணிந்தாலும் துணிவீர்கள்.
நாங்கள் 18 பேரும் பாலாரும் ,தேனாறும் பெருக்கெடுத்து காயல் நகரை சூழ்ந்துகொள்ள சபதம் எடுத்து முயற்சித்து கொண்டிருக்கிறோம். இந்த தலைவி அதற்க்கு முட்டுகட்டையாய் இருக்கிறார்.இருக்கலாமா?என்ற பொருள் பட லுக்மான் அவர்கள் கேள்விகனைகளை காயலர்களின் மீது தொடுத்திருக்கிறார்?
அவருடைய எல்லா கேள்விகளுக்கும் இடுப்பொடியும் பதிலை தந்திருக்கிறார் தலைவி அவர்கள்
அவரின் தூயபணி தொடர தனியோனாம் இறையோனை இறைஞ்சுவோமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross