செய்தி மற்றும் கருத்துகளுக்கு நடுநிலமையான பார்வையில் என் கருத்து! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[24 June 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19587
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பானவர்களே! மதிப்பிற்குரிய ஆபிதா ஷேக் மற்றும் லுக்மான் காக்கா அவர்களின் குற்றசாட்டுகளில் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை குற்றத்துடன் கூறிக்கொண்டு மக்கள் மன்றத்திற்கு இந்த வலையதளம் வாயிலாக முன்வைப்பது குறித்து எனது நடுநிலமையான பார்வையில் ......
1. இருவர்களும் அவர்களுக்குள் இப்படி தவறாக பேசிகொண்டார்களா என்பதற்கு எந்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை குற்ற சாட்டாக எடுப்பது நல்லது அல்ல!
2. இந்த இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் சாதாரண மக்களின் கருத்துகளுக்கு கூட தங்களின் கருத்து ஊர்ஜிதபடுத்தவில்லை என்று நிராகரிக்கும் நிர்வாகிகள் எப்படி ஆதார பூர்வமான ஆடியோ அல்லது வீடியோ இல்லாமல் செய்தி [இச்செய்தி மற்றும் லுக்மான் அவர்களின் செய்தியும் கூட] விட்டார்கள் என்பது மிக பெரிய புரியாத புதிர்!
3 இனி வரும் காலங்களில் உங்களுக்குள் பேசப்பட்ட தவறான மிக அவசியமான காயலின் முன்னேற்றத்தை தடை செய்யும் நிகழ்வுகளாக இருந்தால் மட்டும் அதிலும் பேசும் குரலின் நபர்களை சுட்டிக்காட்டும் திறன் இருந்தால் மட்டும் செய்தி வெளியிடுங்கள். வெறுமனே அவர் என்னை இப்படி சொன்னார். இல்லை இவர்தான் என்னை இப்படி சொன்னார் என்று ஆதாரம் இல்லாமல் நேரத்தை வீணாக்காதீர்கள்.
இதுபோன்று செயல்பட்டால் தான் பேசும் போதும் மிக கவனமாக அனைவர்களும் நடப்பார்கள். இணையதளமும் ஆதாரத்துடன் கூடிய செய்திகளை மட்டும் தான் வெளிடுவார்கள் என்ற எண்ணமும் இருக்கும்.
மற்ற நிர்வாக முயற்சிகளின் குற்றசாட்டிற்கு தகுந்த பதில்களை ஆபிதா அவர்கள் தந்துள்ளதர்க்கு அவர்கள் லுக்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம் அவர்களின் அறிக்கை தங்களின் முயற்சிகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ள ஓர் பாலமாக இருந்ததற்கு!
அன்பான தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களே ஓர் அன்பான வேண்டுகோள்! தயவு கூர்ந்து தாங்கள் யாவரும் பிரிந்து விடவேண்டாம். தங்களுக்குள் உள்ள ஒற்றுமை தான் ஊழல்வாதிகளுக்கு பெரும் சவால்! மறக்க வேண்டாம்.அவர்கள் தங்களின் பிரிவைத்தான் வலி மேல் விழி வைத்துள்ளார்கள். ஜாக்கிரதை! பின் வருவதை முன்னாள் யோசயுங்கள். பிறகு இத்தனை உழைப்புக்கு பலனில்லாமல் ஆகிவிடக்கூடாது.
அன்பு சகோதரி ஆபிதா அவர்களே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வருக்கு அதிகாரமா, அல்லது அரசால் நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலாளருக்கு அதிகாரமா. சற்று யோசித்து பாருங்கள். தாங்கள் கமிசனரையே மாற்ற தெரிந்த நீங்கள் ஏன் ஊழியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாது. முயர்ச்சியுங்கள் சட்டப்படி விடை கிடைக்கும். அப்போது தான் தங்களின் அனைத்து கடிதம், நேரில் சென்று முயற்சித்த அனைத்தும் கைகூடும். இல்லை எனில் அது கிடைப்பது மிக மிக கடினம்.
இரண்டாம் குடிநீர் திட்டம் செயல்படுத்துமுன் தற்போதுள்ள குடிநீர் விநியோகம் 2 நாள் பதில் 10 நாள் ஒருமுறை வருவதின் காரணம் [ யாரும், நிறுவனம் D.C.W. ஊர் போன்றவைகள் திருட்டு தனமாக நமது குழாயில் தண்ணீர் [HIDDEN UNDER WAY TAPPING] எடுக்கிறார்களா என்பதை உறுதி செய்திடுங்கள்.
வஸ்ஸலாம்.
Moderator: உறுதி செய்யப்படாத தகவல்கள் என இதுவரை இந்த இணையதளம் நிராகரித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொதுமக்களின் கருத்துக்களே! நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜமாஅத் தலைவர்கள் ஆகியோரின் அறிக்கைகளை இதுவரை இந்த இணையதளம் அப்படியே வெளியிடுவதை மட்டுமே வழமையாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அவற்றுக்கான மறுப்பறிக்கைகள் கிடைக்கப் பெற்றாலும், அதே போன்று வெளியிடப்பட்டு வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross