Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byVilack SMA (Yi Li , Hetang)[24 June 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 19588
Response to comment No :19580
சலீம் காக்கா , கருத்து பரிமாற்றங்கள் ஒருபுறம் இருக்க , நீங்கள் என் உறவினர் என்ற முறையில் இன்றளவும் உங்கள்மீது அதிக பாசமும் , மதிப்பு , மரியாதை வைத்துள்ளேன் .
எனது கருத்துக்களில் ஏதேனும் தவறு என்பதை நான் உணரும்பட்சத்தில் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க தயங்க மாட்டேன் . தெரிவித்தும் உள்ளேன் .
தற்போதைய latest comment இல் தலைவியின் குடும்ப சூழ்நிலையை விமர்சித்ததாக சொல்கிறீர்கள் . அவரது குடும்ப சூழ்நிலை எனக்கும் நன்றாக தெரியும் . நான் சொல்ல வந்தது , பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் இதையெல்லாம் காரணமாக சொல்லலாமா என்பதுதான் . இந்த கமெண்ட் வெளிவந்த ஒருசில நிமிடங்களில் தலைவி அவர்கள் என்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து , நான் இப்படி எழுதியதால் மிகவும் மன வேதனை அடைந்ததாகவும் சொன்னார்கள் . அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே , நான் எழுதியதின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை தலைவியிடம் சொல்லும்படி சொன்னேன் . ஒருவேளை அவர்கள் அதை தவறாக எண்ணி இருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தையும் அந்த போனிலேயே சொல்லி விட்டேன் . நீங்கள் தலைவியிடம் தொடர்புகொள்பவராக இருந்தால் , கேட்டு தெளிவு பெறலாம் .
கருத்து எண் 8376 , நான் அப்போதே , தவறாக எழுதிவிட்டதாக சொல்லிவிட்டேன் . அதையும் பாருங்கள் .
மீலாதுவிழா கருத்து பரிமாற்றத்தில் கொழும்பு ஜமால் அவர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டதாக சொல்லும் நீங்கள் , அதே ஜமால் அவர்களை சென்றமுறை ஊரில் பார்த்தபோது நடந்த சம்பவத்திற்காக என்னிடம் வருத்தம் தெரிவித்தார் .
மெகாவை இழிவு படுத்தி கேசட் வெளியிட்டவர்களை நான் ஆதரிப்பதாக சொன்னீர்கள் . இன்றளவும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை . அது உங்களின் மனப்பிரமை .
கமெண்ட் 12501 , இதற்காக சீறிப்பாயும் நீங்கள் , இன்னொரு கருத்தில் ஜனநாயக படுகொலையை காப்பாற்றி விட்டோம் என்றீர்கள் . வேடிக்கையான கமென்ட் . எப்படி காப்பாற்றினீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
மற்றபடி என்னுடைய கமெண்டுகளில் தவறுகள் இருப்பதாக நான் அறியவில்லை . உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக எழுதுவேன் . நல்லதை என்றென்றும் ஆதரிப்பேன் . தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் ( உங்கள் தம்பி போல தட்டிக்கேட்கவில்லை )
சிலமாதங்களுக்குமுன் நமது தலைவியுடன் போனில் பேசினேன் . ஊரை சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒருசில திட்டங்களை சொன்னார்கள் . மிகவும் நல்ல திட்டம் , செய்யுங்கள் என்றேன் . ஆக நல்லதை பாராட்டுகிறேன் , மற்றதை விமர்சிக்கிறேன் , அவ்வளவுதான் .
உங்களுக்கும் , இன்னும் நல்ல பல கருத்துக்களை எழுதும் அளவுக்கு , எல்லாம் வல்ல அல்லாஹ் தூய எண்ணங்களையும் , நல்ல உடல் நலத்தையும் தந்தருள்வானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross