தொலைந்து போன நம்பிக்கைகள்.......... posted bymusthak ahamed (goa)[28 June 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 19677
மதிப்பிற்குரிய லுக்மான் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு ... உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக......ஆமீன்.
உங்களை யார் என்று எனக்கு முன்பு தெரியாது.... முதன் முதலாக நீங்கள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் போது உங்கள் அறிக்கை மூலமாகத்தான் உங்களைப்பற்றி தெரிய நேர்ந்தது.. அதன் பிறகு நீங்கள்தான் துணை தலைவராக வர வேண்டும் என்று ஆசை பட்டேன்..... எப்படி உங்கள் அறிக்கை மூலமாக உங்களை பிடித்துப் போனதோ அதை போலே தற்போதைய உங்கள் அறிக்கை மூலமாக உங்களை பிடிக்காமல் போனதும் நிஜம்.........
உங்கள் அறிக்கை கதிர் வீச்சில் கருகிப்போனது,,,, உங்கள் மீதான
எங்கள் நம்பிக்கை குருவிகள்தான்.........
யார் துணை தலைவராக வந்தால் தூய்மையாகும் என்று நினைத்தோமோ அவரின் ஆடை எங்கும் கறைகள்..................... இன்னொரு சத்தியத்தை தவிர்ப்பதற்காக ஒரு சின்ன விளக்கம் இங்கே கறை என்று குறிப்பிட்டது கை நீட்டுவது மட்டும் அல்ல.............
எங்களுக்கு உள்ளம் அறிய சக்தியற்ற நிலையில்
உங்கள் அறிக்கையே உங்கள் உள்ளமானது. உண்மை அறியும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.
ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இப்போதும் சரி சென்ற இரு அறிக்கைகளிலும் சரி உங்களக்கு எதிராக கருத்து பதிவு செய்தவர்களில் பல பேர் நீங்கள்தான் துணை தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவர்கள்............... ஆனால் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்........ நீங்கள் துணை தலைவராக வந்திருந்தால் இந்த ஆறு மாதம் கூட ஒழுங்காக தலைமையை செயல் பட விட்டிருக்க மாட்டீர்கள் என்றுதான் தோன்றுகிறது..............
எந்த சார்பும் அற்றவராக கருதப்பட்ட நீங்கள் உங்கள் அறிக்கையின் மூலம் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளீர்கள். ஆக எல்லாம் தயார்..........................
வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு பக்கம் நீங்கள் ஜெயித்து விடுவீர்கள் என்றுதான் தோன்றுகிறது.
உங்களிம் பின் புலம், உங்களின் சாமார்த்தியமான காய் நகர்த்தல்கள்............ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விடலாம்.. சட்டத்தின் சட்டைப்பைகளை அணிந்து நீங்களே அடுத்த தலைவராக வந்துவிடலாம். அதற்க்கான எல்லா தகுதிகளும் உங்களுக்கு இருப்பதாகவே தோன்றுகிறது.......... பின்னர் நீங்கள் நினைத்த மாதிரி ஐக்கிய பேரவையிலேயே ஒரு அலுவலகம் வைத்துக் கொள்ளலாம்......... அறை எங்கும் நிரம்பி வழியும் காலண்டர்களும் டைரிகளும்.
பாவம் மக்கள்................. ஹாமித் ரிபாய், சுல்தான் காக்கா, கவி மகனார் உங்கள் எழுத்துக்களில் மிளிரும் நடை அழகு ஒரு விசயத்தை வெளிப்படுத்தும் பாங்கு........... உங்களால் நல்ல பல இலக்கியங்கள் தரமுடியும் என்றுதான் தோன்றுகிறது...... எழுத்து மேடையில் பங்கு பெற்று உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிகொள்ளுங்கள்..............
சலீம் காக்கா........ உங்களுக்கு இருக்கும் திறமைக்கு உங்கள் பணிகளில் முழு கவனம் செலுத்தி இன்னும் பல உயரம் தொட்டு சிறப்படைய முயற்சி செய்யுங்கள். மற்றபடி உங்கள் முயற்சிகள் எல்லாம் விளையாத நிலத்திற்கு இறைத்த நீர்போல் ஆகிவிடும்..ஆகிவிட்டது...............
இங்கே எதுவும் மாறப்போவது இல்லை. மாற்ற நினைப்பவர்கள்தான் மாறி போய் இருக்கிறார்கள்................
சுற்றிலும் எங்கும் நிசப்தம்......... ஊரே உறங்கி கிடக்கிறது.............. அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது.......... குடும்ப நிகழ்வுகளையும் தாண்டி அறிக்கைகள் ஏற்படுத்திய காயம் உறங்க விடாமல் வேதனை செய்கிறது........... ஏனோ மூசாவின் ஞாபகம் வருகிறது..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross