நாரதர் வேலையும் & 'தண்ணி' லை அறிக்கையும் சாதித்தது என்ன ?? posted bySalai.Mohamed Mohideen (USA)[28 June 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19678
ஒரு வரி பதில்... சின்னபுள்ளைதனத்தின் வெளிப்பாடு!!
இது போன்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் & Loose Talk அறிக்கைகளுக்கு கருத்து எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இந்த அறிக்கையை படித்தால் தலைவிக்கும் -> உறுப்பினர் களுக்கும் & ஐக்கிய பேரவைக்கும் சிண்டி முடியும் / நாரதர் வேலையே நன்றாக உணர முடிகின்றது.
உண்மையிலேயே நன்மையை ஊர் நலன் நாடுபவர்கள், பதிலறிக்கை பார்த்த பிறகு நகர்மன்ற தலைவரிடம் பரஸ்பரம் (கருத்து வேறுபாடுகளை களைந்து) ஆகி ஒற்றுமையை பேணியிருப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான எண்ணம் நிறைவேறாத வரை ஓய மாட்டார்கள் போல் தெரிகின்றது.
குறைகளுக்கு அப்பாற்பட்டவன் நம்மை படைத்தவனே. நகர்மன்ற தலைவியிடமும் உறுப்பினர்களிடமும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக நினைத்து 'தன்னிலை' சாதித்தது என்ன தெரியுமா??
தேவையற்ற (தலைவருக்கும் & உறுப்பினர்களுக்கும் 'சிண்டி முடிக்கும்' வேலை?) தன்னிலை விளக்கம்... நேற்றைய நகர்மன்ற கூட்டத்தை 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்' என்ற உத்தம புத்திர நகர்மன்ற உறுப்பினர்கள் இதனையே சாக்காக வைத்து நகர்மன்ற கூட்டத்தை வெளிநடப்பு செய்து விட்டதாக அறிந்தேன்.
வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்... யோக்கியர்கள் உத்தமர்கள் சத்தியத்திட்க்கு நியாயத்திட்க்கு கட்டு பட்டவர்களாக இருந்திருந்தால் முதலில் அந்த ஆடியோவில் பேசிய 'களவாணி' எண்ணம் கொண்ட அந்த இரு உறுப்பினர்களை நகர்மன்ற கூட்டத்திலிருந்து முதலில் வெளியேற்றி / நீக்கி விட்டு அப்புறம் புறக்கணிப்பு செய்திருக்கலாம். ஆனால் அவர்களின் கூட்டோ அக்கயர்வர்களிடம்தானோ?
இவர்கள் அனைவர்களின் ஒரே குறிக்கோள் தலைவியை பழிவாங்க (துரத்தி விட) ஆசை... ஏனென்றால் நீங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க & அபிமான பணக்காரரிடம் பிச்சை (அன்பளிப்பு ?) எடுக்க விட மாட்டேன்கிறார்.
முன்னாள் நகர்மன்ற தலைவருக்கு செய்த அதே சூழ்ச்சிகள் நெருக்கடிகளை தந்து (இதில் முன் அனுபவம் கொண்டவர்களை வைத்து அப்படியே அச்சு பிசகாமல் ) வீட்டுக்கு அனுப்பலாம் என்று மனப்பால் குடித்து அலைவது பயன் தரப் போவதில்லை. ஏனென்றால்... தற்போதைய தலைவர் பொது மக்காளால் தேர்தெடுக்க பட்டவர். லஞ்ச லாவண்ய உறுப்பினர்களால் தனவந்தர்கள் லெட்டர் பேட் இயக்கங்களின் ஆதரவினால் அல்ல.
தலைவியை தூக்கி விட்டு 'டம்மி தலைவரை' கொண்டு வர பாடுபடும் ஊழல் நகரமன்ற உறுப்பினர்களும்
/ அலுவலர்களுக்கும் அவர்களை ஆட்டுவிக்கும்
'மகாராஜாக்களும்' விரும்பினர். அதற்காக எல்லோராலும் நல்லவர் / வல்லவர் (?) என்று அறியபட்ட ஒருவரை வைத்தே நினைத்ததை அழகாக சாதித்து விட்டனர் & மக்களையும் குழப்பி பிளவு படுத்தி (Divide & Rule) விட்டனர். வாழ்க ஜனநாயகம் !!
ஐக்கிய பேரவையை இங்கே இழுத்ததின் அவசியம் என்னவோ. பேரவையே தேர்தலுக்கு அப்புறம் அமைதியாக ஒதுங்கியிருக்கிறார்கள். இங்கே ஐக்கிய பேரவைக்கும் நகரமன்ற தலைவிக்கும் நாரதர் வேலை செய்ய வேண்டியதின் அவசியம் புரியவில்லை. ஓஹ் ... பெரியவர்களுக்கும் கட்டுபட மாட்டேன்கின்றார் என்பதனை உணர்த்துகின்றீர்களோ அல்லது பேரவையை / பேரவையின் ஆதரவாளர்களை உசுப்பெற்றி குளிர் காயவா??
தொழிலதிபர் நிறுவனத்தை இழுத்ததை பார்த்தால் சூசகமாக (?) பேசப்பட்ட நபர் அவர்தானோ என்று பலரும் விளங்கி கொள்வதற்க்காக தேவையில்லாமல் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காண்பித்தது (சனீஸ்வரன் நடு உச்சியில் இருக்கிறான்) போல தெரிகின்றது.
ஒரு காலத்தில் (குறிப்பாக துணை தலைவர் & portfolios தேர்தலின்போது ) உங்களையும் ஒரு சிலரையும்
தவிர மற்ற பெரும்பாலான உறுப்பினர்கள் கையூட்டு பெற்று விட்டார்கள் என்று உங்களை உயர்வாக நினைத்து புகழ்ந்து
மற்றவர்களை குறைகூறிய போதெல்லாம்... இந்த சக உறுப்பினர்களின் மீது அன்றில்லாத பாசத்தை... அணியாயதிட்க்கு தலைவியின் மீதுள்ள 'காண்டை' சாக்காக வைத்து தற்போது அவர்களின் மீது அதீத அக்கறை ... அவர்களுக்காக உரிமைக்குரல் குரல் கொடுப்பதுபோல காட்டுவதன் (நடிப்பதன்) அவசியம்தான் விளங்கவில்லை. கொஞ்ச காலம் பொறுங்கள். இந்த ஊழல் / சூழ்ச்சி கூட்டம் உங்களுக்கும் வெகு விரைவில் 'ஆப்பு' வைக்கும்... நீங்கள் லஞ்சம் வாங்காதிருக்கும் வரை.
நாரதர் வேலைக்கும் & டீம் வொர்க்கும் (Team work) என்ன சம்பந்தம்???
இப்போதெல்லாம் இது போன்ற வெட்டி (?) தன்னிலை அறிக்கைகள், பிறரிடம் கையூட்டு / அன்பளிப்பு பெறுபவர்கள் அல்லது தனக்கு 'படி' அளக்கும் (sponsors for anything) பணக்கார முதலைகளிடம் தன் நன்றி விசுவாசத்தை காட்டுவதற்க்காக தனிநபர் கட்டுரைகள், letter pad - களின் மனுக்கள், சிலரின் கருத்துக்கள் / எண்ணலைகள் கூட அதிருப்தி செய்திகள் (நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார்) என்ற பெயரில் அவதூறுகளாக / குறைகளாக வருவதே 'பேசன்' ஆகி விட்டது. ஒவ்வொன்றுக்கும் வாசகர்கள் கருத்தெழுதி நகரமன்ற தலைவி விளக்கமளித்து உங்களுடைய பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டுமா என்று சிந்தியுங்கள் !!
இதுபோன்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் / சீண்டி முடியும் அறிக்கைகளை நம்புகின்ற நிலையில் சிந்திக்கின்ற வாசகர்கள் பொதுமக்கள் எவரும் இல்லை !!
நல்ல தலைவி கிடைத்தும் நகர்மன்றத்திட்க்கு விடிவுகாலம் இல்லை என்று ஒதுங்கி நிற்க நமதூர் மக்கள் ஒன்று படிக்காத பாமரர்கள் இல்லை. சிந்திக்க தெரிந்த கூட்டம். சத்தியத்தின் பக்கமே என்றும் இக்கூட்டம் நிக்கும்!! ஓடி ஒளிந்து கொள்ள நம் மக்கள் ஒன்றும் தயிர் சாதம் / சட்னி சாம்பார் கூட்டம் இல்லை.
அட்மின் பார்வைக்கு : KOTW போன்ற professional மீடியாக்கள் Letter pad அமைப்பின் மற்றும் 'தனி நபர்' அவதூர்/அதிருப்தி செய்திகளுக்கு முக்கியம் தராது (அதனை வெளியிடாது) கடைபிடித்த அந்த 'நல்லதொரு' நடைமுறையை.... ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற விளக்கங்களை (குழப்பங்களை) வெளியிடாமல் இருப்பது எல்லோருக்கும் ஊர் ஒற்றுமைக்கும் நல்லது !!
இவர்களை போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சுய லாபத்திற்க்காக ஆதரவு கரம் நீட்டுபவர்கள் அதில் குளிர் காய நினைப்பவர்கள் வேண்டுமென்றால் வெளியிடட்டும்.
Last but least.... this fight/statement is Good for nothing!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross