Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted bykader meeran sahib (Saudi arabia)[30 June 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19754
நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தவர்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக வெளியே போயிடலாமே. உள்ளே இருந்து நீங்கள் ஒன்னும் செய்ய போறது இல்லை. நகர்மன்றத்தில் உள்ளே இருப்பதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களே நிரூபித்து இருக்கின்றார்கள்.
உண்மையிலே இவர்கள் காயல் நகர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நிச்சயமாக நகர்மன்றதை விட்டும் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் நமக்கு சேவை செய்யமாட்டார்கள். பணம் சம்பாதிக்கத்தான் இவர்கள் நகரமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றார்கள். உங்களில் ஒருவர் அல்லாஹ்வை முன்னிலைபடுத்தி உங்களுடைய கல்பை தொட்டு கேட்டுப்பாருங்கள் மக்களுக்கு உண்மைலேயே நீங்கள் சேவை செய்யத்தான் நகரமன்ற உறுப்பினர் ஆகுநீர்களா? (எங்களுக்கு உங்கள் மீது இந்த மாதிரி நம்பிக்கையின்மை வருகிற அளவுக்கு உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கின்றது)
உண்மையிலேயே அந்த நல்லெண்ணம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக நீங்கள் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டீர்கள். மாதப்பணத்தை மட்டும் கவரில் வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு காயல் நகர மக்களுக்கு சேவை செய்வதற்காக போடப்படும் நகரமன்ற கூட்டத்தை விட்டும் வெளிநடப்பு செய்த நீங்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு வெளியே போயிருக்கலாமே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையா? பணத்துக்கு அடிமையா?
வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் பணம் சம்பாதிக்க நமது நகரமன்ற தலைவி ஆபிதா லாத்தா தடையாக இருக்கின்றார்கள் போலும். அதனால்தான் சப்ப குற்றச்சாட்டுகளை நகர்மன்ற தலைவியின் மேல் சுமத்தியிருக்கின்றார்கள். நமது தலைவியே வெளியேற்றிவிட்டு அவங்க பாஸ் சொல்ற நபரை கொண்டு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். பணத்துக்கு விலை போன மாடுகள். நல்ல உறுப்பினர்கள் கூட அங்கே இருக்கின்றார்கள் அவர்களையும் கூட இவர்கள் மாற்றிவிட்டார்கள்.
தயவு செய்து கவரோட வாங்குன பணத்தை வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களே திருப்பி கொடுத்துவிடுங்கள்.
( நீ சொன்னா திருப்பி கொடுத்தரனுமா நாங்களே கஷ்டப்படாம வாங்குன சம்பளம்)
கேவலம் பணத்துக்காக மக்கள் நலனையே பாதிக்க கூடிய அளவுக்கு உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. இதுக்குத்தான் சொல்றது நல்ல படித்தவர்களையும், தக்வா உள்ளவர்களையும் நாம் இந்த பதவியிலே அமர்த்த வேண்டும். இதற்க்கு அவர்கள்தான் மிக்க தகுதியானவர்கள். (நம்ம மக்கள்தான் வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கின்றார்களே)
சம்பளம் வாங்குறது ஒருவரிடம் அதற்கு வேலை பாக்குறது இன்னொருவரிடம் இப்படித்தான் நம்ம உறுப்பினர்களுடைய நிலைமை இருக்கின்றது
உங்களை மாதிரி பணத்துக்கு விலை போற கவுன்சிலர்கள் இருந்தால் நம்ம ஊரை வளர்ச்சியடைய செய்யமுடியாது.
சிலர் நினைக்கின்றார்கள் அந்த பணக்காரன் பெரியவன் இந்த பணக்காரன் பெரியவன் என்று. எந்த பணக்காரனும் பெரியவன் இல்லை. அல்லாஹ்வை தவிர பெரியவன் யாரும் இல்லை. அல்லாஹ்தான் பணக்காரன். ஒருவனிடம் பணம் இருந்து அவன் உயிருடன் இருக்கும் வரைக்கும்தான் அவன் பணக்காரன். அவன் மரணித்தால் மய்யித் தான். யாராவது மய்யித்தை போயி பணக்காரனு சொல்லுவோமா. உடம்பில் உயிர் இருக்கும்போது பணக்காரனாக இருந்த ஒருவன் அவன் மரணித்த பின் அவனுடைய நிலைமை மய்யித் காரன். ஆனால் கருணைக்கடலான அல்லாஹ்வுக்கு மரணம் என்பதே இல்லை அப்படிப்பட்ட பணக்கரனாகிய அல்லாஹ் சொல்றப்படிதான் நாம் கேட்க்க வேண்டும். நடக்க வேண்டும் .
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் நமது ஊரை அநியாயக்கரர்களிடம் இருந்து காப்பாற்றுவானாக! நமது ஊரை ஒற்றுமை உடைய ஊராக்கி வைப்பானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross