கண்டதும் கேட்டதும் (பொய்யல்ல) posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[01 July 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19755
வியாழன் (28-06-2012 ) அன்று நகர்மன்றத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பார்வையாளராக சென்றிருந்தேன்.
இரு பெண் உறுப்பினர்களைத் தவிர எல்லோர்களும் ஆஜராகியிருந்த்தார்கள். ஏட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தங்களது இடத்தில் அமர்ந்தார்கள். அவர்களது படி (கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொகை - Rs 600/- இருக்கும் என்று எண்ணுகிறேன்) தனித்தனி கவரில் போட்டு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக (இருவர்களைத் தவிர) சொல்லிவைத்தாற்போல் தங்களால் முடிந்த காரணங்களை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்கள். காரணம் கூற முடியாதவர் , " நான் அதை ஆமோதிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
மொத்தத்தில் இரு உறுப்பினர்களை கொண்டு தலைவி கூட்டத்தை தொடங்கினார். Commissioner ம் உடன் இருந்தார். கொஞ்ச நேரத்தில் வெளிநடப்பு செய்யாத இரு உறுப்பினர்களில் ஒரு உறுப்பினரை காணவில்லை. வெளிநடப்பு செய்யாது கடைசிவரை இருந்த உறுப்பினர் சகோ., சம்சுதீன் மட்டுமே.
அவர்கள் வெளிநடப்பு செய்வது அவர்களின் உரிமை. வெளிநடப்பு செய்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்திவிட்டு செல்வார்கள் என்று எண்ணினேன். ஒருவர் கூட நாம் கலந்துகொள்ளாத கூட்டத்தில் கலந்துகொண்டதற்க்காக வழங்கப்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவில்லை.
இப்படிப்பட்டவர்கள் ஊழலை ஒழிக்க தலைவிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாம் நினைத்தோமேயானால் அது நம்மிடமுள்ள குறைபாடேயன்றி வேறில்லை.
இதில் எங்கள் ஜமாத்தை சார்ந்த இரு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள். அதில் ஒருவர் பள்ளிக்கூடம் பக்கம் சென்றிப்பாரா என்பது சந்தேகம். மற்றொருவர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான் (பட்டதாரி). அவர் வெளிநடப்பு செய்வதற்கு அவர் சொன்ன காரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
இதோ அவர் சொன்ன வார்த்தைகள்.
" நகரமன்ற கூட்டங்களை video " ஒளிப்பதிவு செய்து மக்களுக்கு போட்டுக்காட்டுவது நமது நகர கலாசாரத்திற்கு மாறுபட்டது. வெளிநாட்டில் இருப்பவர்கள் அதை நெட்டில் பார்ப்பார்கள். இது நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. அதனால் ஒளிபதிவு செய்து மக்களுக்கு காட்டவேண்டும் என்ற உங்களுடைய (தலிவியுடைய ) இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்".
(இதில் அவர் "வெளிநாட்டில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்டது வெளிநாட்டவர்களை என்று நான் கருதுகிறேன். லோக்சபை, ராஜ்ய சபை மற்றும் சட்டசபை நிகழ்வுகள் தொலைகாட்சியில் காட்டப்படுவதை பாவம் இந்த ஆசான் அறியவில்லை போலும்)
சகோ.., சாமு அவர்கள் தனது அறிக்கையின் நகலை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடைய குற்றச்சாட்டில் சங்கர் என்பவர் குடி போதையில் இஸ்லாமிய சமுதாயத்ததின் மீது அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நான் விசாரித்தவரை தெரியவில்லை. (நடந்திருக்கலாம்). ஆறுமுகநேரியை சார்ந்த சங்கர் ஒரு ஆறுமுகநேரி பஞ்சாயத்து உறுப்பினர் என்பது தெரிய வந்தது. பொறுப்புள்ள ஒரு பேரூராட்சி உறுப்பினர் அருகிலுள்ள் நகராட்சிக்குச் சென்று ஒரு சமுதாய மக்களை தரக் குறைவாக பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்கத்து குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து மறுபக்கத்தினரை குற்றவாளியாக கருதுவது ஆறாவது அறிவின் விளிம்பிளிருப்பவன் கூட செய்ய மாட்டான். (web site யில் பலர் comments என்ற பெயரில் இதை வாடிக்கையக்கிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம் ).
எனவே அட்மின் அவர்கள் இது விசயமாக சங்கர் அவர்களை சந்தித்து அவரது version ஐ வெளியிட்டால் நல்லது என்பது என் கருத்து. ஒரு வேலை சகோ.., சாமுவின் குற்றச்சாட்டு உண்மையென்றால் (அப்படி நடந்திருந்தால்) அது கண்டிக்கத்தகுந்தது.
லஞ்சம் வாங்குவது பற்றி பேசிய அந்த இரு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் நகரமன்ற கூட்டங்களில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சகோ.., லுக்மான் ஒரு அறிக்கை விட்டதாக எனக்கு ஞாபகம். அவர் வெளிநடப்பு செய்யும் பொழுது சொன்ன காரணத்தில் இதையும் (அந்த இரு உறுப்பினர்களும் இங்கு இருக்கிறார்கள், ஆதலால் வெளிநடப்பு செய்கிறேன் என்று) சேர்த்து சொல்லியிருந்தால் அது அவருடைய வாதத்திற்கு 50% வழு சேர்த்திருக்கும். ஆனால் அவர் கூறிய காரணம், "இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும்" சொன்னார்.
ரோட்டில் போகும் பாம்பை சேலைக்குள் இழுத்துப்போடுவது என்பது இதுதானோ? Chennai Super Kings fans' clubஇல் இவரும் (விசிறியாக) சேர்ந்து விட்டாரோ என்று மக்கள் மானசீகமாக பேசவதை உணரமுடிகிறது.
இவர்கள் வெளிநடப்பு செய்ததினால் ஊருக்கு ஒரு நன்மை நடந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டு கடைசிவரை கூட்டத்தை அவதானிதவர்களில் சிலர் பேசிக்கொண்டனர். அதாவது இரண்டாவது மீன் மார்கட் சம்பந்தமான் சிலமாதம் நிலுவையிலுள்ள ஒரு பிரச்சனைக்கு சுமுகமாக முடிவு கிட்டியதென்று (பெருமூச்சி விட்டனர்).
இவர்கள் வெளிநடப்பு செய்யவேண்டும் என்று எங்கு ரூம் போட்டு முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு முடிவுடன் இருக்கிறார்கள். தலைவி எப்படி காயை நகர்த்துகிறார் என்று பார்ப்போம். மக்கள் எப்படி இவர்களை நகர்த்துகிறார்கள் என்று பார்ப்போம்.
கடந்த பஞ்சாயத்து தலைவர்களின் தலைமையில் (ஆட்சி காலங்களில்) காயல்பட்டணத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது போலவும், சகோதரி ஆபிதாவின் ஆட்சியில் சாக்கடை ஓடுகிற மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்த முனைகிற கூட்டத்திற்கு கைக்கூலிகளாக செயல்படுகிற நகராட்சி உறுப்பினர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை செயலிழக்கவைக்கும் நாள் இன்ஷா அல்லாஹ் வெகுதூரத்திலில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross