குற்றசாட்டும் பதில் குற்றசாட்டும் posted bySaalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam)[03 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19813
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த நீண்ட நெடிய குற்றசாட்டுகளும் எதிர் குற்றசாட்டும் அதற்கான பதிலும் மாறி மாறி வந்து அதற்கான comments -ல் வாந்தி, புளிப்பு எல்லாம் வந்து விட்டது. இந்த விவாதங்களுக்கு அச்சாரம் போட்டது News ID # 8616. ஒரு செய்தியை போடும்போது அதிலும் குறிப்பாக sting operation பற்றிய செய்தியை போடும்போது சம்பந்த பட்ட நபர்கள் யார் என்று குறிப்பிடவேண்டும். வாசகர்களின் யூகத்திற்கு விடக்கூடாது.
ஆனால் நகரமன்ற உறுப்பினர் லுக்மான் அவர்கள் இந்த செய்திக்கு தன்னிலை விளக்கம் என்ற பெயரில் நகரமன்ற தலைவி மீது குற்றம் சாட்ட தேவை இல்லை. மாறாக தனியாக தலைவியின் நடவடிக்கை பற்றி குற்றம் சாட்டிஇருக்காலம். உறுப்பினர் லுக்மான் அவர்கள் தலைவி பற்றி ஊழல் குற்றசாட்டு ஒன்றும் சொல்லவில்லை. மாறாக நிர்வாக குறைபாடு பற்றி தான் குறை சொல்லியுள்ளார். தலைவியின் ஆதரவாளர்கள் அதை கூட தாங்க முடியாமல் அவரின் மீது சேற்றை வீசியுள்ளனர்.
அந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்த நகரமன்ற தலைவி அவர்கள் நீண்ட அபரிமிதமான தகவல்களுடன் எல்லா உறுப்பினர்களையும் ஊழலுக்கு துணை போவது போலவும் தான் மட்டும் தான் ஊழலை தடுப்பது போலவும் சொல்லியுள்ளார். அதில் சில குற்றசாட்டுகள், நேரடியாக உறுப்பினர் லுக்மான் அவர்களை நோக்கி வீச பட்டது.
அதற்கு விளக்கம் அளித்த உறுப்பினர் லுக்மான் அவர்கள் அதனை மறுத்ததோடு இல்லாமல் மேலும் சில குறிப்புகளையும் அளித்துள்ளார். அதற்கும் நகரமன்ற தலைவியின் ஆதரவாளர்கள் உறுப்பினர் மீது வசை பாடியுள்ளனர்.
நகரமன்ற தலைவியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினரின் ஆதரவாளர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கருத்தை பதிவு செய்யட்டும். இருவரின் குற்றசாட்டுகளின் merit and reliabilty மட்டும் பார்க்கவும். அதை விட்டு விட்டு நம் ஆதரவு பெற்றவரை மற்றவர் குறை சொல்கின்றாரே என்று அவர் மீது வசை பாட வேண்டாம். ஏன் என்றால் இதில் கருத்து பதிவு செய்த நபர்களில் இதன் உண்மை அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்த குற்றச்சாட்டுகளின் உண்மையை, நம்மை படைத்து பரிபாலிப்பவன் மிக அறிந்தவன். இந்த குற்றசாட்டு & எதிர் குற்றச்சாட்டுகளில் அவதூறு அல்லது பொய் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
நகரமன்ற தலைவி மீது உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறிய குற்றசாட்டு போல், வேறு சில குற்றசாட்டுகளும் நகரமன்ற தலைவி மேல் சுமத்தப்பட்டுள்ளது. viewers நடுநிலையோடு வாசிக்கவும். இந்த குற்றசாட்டுகள் தலைவியை நோக்கி உள்ளதால், தலைவியின் ஆதரவாளர்கள், அந்த குற்றசாட்டின் உண்மை தன்மை அறிந்து, விளக்கம் கேட்டு comments பதிவு செய்ய வேண்டுகிறேன்.
1 ) ஏப்ரல் மாத கூட்டத்தில் "நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளை வருவாய் உதவி ஆய்வாளர் உதவியுடன் மறு அளவீடு செய்து மண்டல வாரியாக பிரித்து சரியான முறையில் முறையாக அளவில் வரி விதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க மன்றத்தின் அனுமதிக்கு" இந்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்தபோது உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்கான வரியை உயர்த்தக் கூடாது என்று விவாதித்த பிறகு "நகரளவில் மறு அளவீடு செய்ய தற்போது அவசியம் இல்லை என மன்றம் தீர்மானிக்கிறது" என்று மினிட் புக்கில் எழுதினார்களே, அது நம் தலைவி நமதூர் மக்களுக்கு வைக்க நினைத்த ஆப்பு.ஆனால் வீடுகளுக்கு வரி உயர்த்தும் கோரிக்கையை எதிர்த்தது தலைவிக்கு எதிராக செயல்பட்டது உறுப்பினர்கள் செய்த குற்றம்தான்.
2 ) அதே ஏப்ரல் கூட்டத்தில் "நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு காலிமனை வரி வசூலிப்பது சம்பந்தமாக மன்றத்தின் அனுமதிக்கு" என்ற கோரிக்கைகு தலைவி ஆதரவாக பேசினார்கள். அதற்கு உறுப்பினர்கள் காலிமனை என்றால் நகரின் அனைத்து பகுதிகளிலும் நிலங்கள் வாங்கி வைத்திருக்கின்ற அனைவரின் மீதும் வரி என்ற பெயரில் சுமை ஏற்றவேண்டாம் என்று கூறியும், கூட்டம் நிறைவடைந்ததும் மினிட் புக்கில் "இது குறித்து ஆவண செய்ய மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று எழுதி இருக்கிறார். இதுவும் நம் தலைவி நமக்கு செய்த அளப்பரிய சேவை. ஆனால் இதற்கு ஆதரிக்காதது உறுப்பினர்களின் குற்றம்தான்.
3 ) மேலும் அக்கூட்டத்தில் பொருள் எண் 12-ல் "பொதுசுகாதார பிரிவில் உள்ள தண்ணீர் வணடி தெருக்களுக்கு பொது நிகழச்சிகளுக்கும், பள்ளி வாசல்களுக்கும், விழாக்களுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டியது இருப்பதாலும் அதனை பழுது பார்க்க உத்தேச மதிப்பீடு ரூ.65.000-த்திற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது" என்ற கோரிக்கைக்கு அந்த வண்டிக்கு எந்தவித டாக்குமெண்ட்களும் இல்லை அதற்கு இவ்வளவு செலவு செய்வதைவிட புதிய வண்டி வாங்கலாம் என்று ஒரு உறுப்பினர் கூறியதற்கு, அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவியும் இணைந்துதானே அந்த கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு மினிட் புக்கில் "மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று ரிப்பேர் செய்ய அனுமதி வழங்கி எழுதியது ஏன்?
புதிய வண்டி வாங்குவதற்கு காலதாமதம் ஆகலாம் அதனால்தான் பழைய வண்டியை ரிப்பேர் செய்ய கூட்டத்திற்கு பிறகு சில உறுப்பினரின் அனுமதியோடு அனுப்பப்பட்டது என்று தற்போது தலைவி கூறினாலும் 18 உறுப்பினர்களையும் அழைத்து நாம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி விட்டோம், தற்போது சூழ்நிலை இப்படி இருக்கின்றது என்று கூறினால், யாரும் வேண்டாம் என்று சொல்லப்போகிறோமா? தாங்கள் ரிப்பேருக்கு அனுப்பியதை யாரும் குறைகூறிவிடகூடாது என்பதற்காக மினிட் புக்கில் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு மாற்றமாக எழுதலாமா?
4 )ஏப்ரல் மாத கூட்டம் பொருள் எண் : 15-ல் "காயல்பட்டணம் நகராட்சி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மேல ஆத்தூரில் அமைந்துள்ள திட்டம் மூலமாக குடிநீர் பெற்று வருகிறது. அவ்வகைக்காக காயல்பட்டணம் நகராட்சி தமிழ்ந்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளது. அப்பாக்கியினை தமிழ்ந்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்திட முடிவு செய்வது குறித்து நகர்மனற தலைவரின் கடிதம் மன்றத்தின் அனுமதிக்கு" என்ற தங்களது கோரிக்கை விவாதத்திற்கு வந்தது இக்கோரிக்கைக்கு ஆதரவாக எத்தனை உறுப்பினர்கள் பேசினார்கள்? எதிர்ப்புதானே அதிகமாக இருந்தது. தற்போது கட்டவேண்டாம் என்று பல உதாரங்களை எடுத்துக்கூறியும் மினிட் புக்கில் "காயல்பட்டணம் நகராட்சி தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்திற்கு வைத்துள்ள பாக்கியினை செலுத்திட மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று உங்கள் எண்ணத்தை பதிவு செய்தால். இந்த நகராட்சி கூட்டம் எதற்கு? விவாதம் எதற்கு? தலைவியே தனியாக கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதானே?
உறுப்பினர்கள் நகராட்சி கூட்டங்களில் ஊரின் நலனுக்காக இதுபோன்ற விசயங்களில் வாதிட்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மினிட் புக்கில் மாற்றி எழுதப்பட்டால் அவர்கள் உள்ளே விவாதங்கள் செய்து என்ன பயன்? கூட்டத்தில் கலந்து என்ன பயன்? அவர்களே கூட்டத்தை நடத்தட்டும், அவர்களே தீர்மானங்களை நிறைவேற்றி மினிட் புக்கில் ஏற்றட்டும்.
தற்போது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கூட்டப் பொருள் மற்றும் மினிட் புக்கில் ஏற்றப்படும் தீர்மானங்கள் அனைத்து நகராட்சியின் தனி இணையதளத்திவ் வெளியிடப்பட்டுள்ளன. அவைகளை காண http://municipality.tn.gov.in/kayalpattinam/salient_council.html இங்கு கிளிக் செய்யவும்.
தலைவியும் மற்றைய அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள்தான். ஊர் நலனுக்காக எல்லோரும் இணைந்தால்தான் ஊருக்கு நன்மை கிடைக்கும். அதை விட்டுவிட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று நினைத்தால், அதற்காக அவர்களின் துதிபாடிகள் தூபம் போட்டால் ஊருக்கு நன்மை கிடைப்பதற்கு பதில் கெடுதி தான் அதிகம் ஏற்படும். அதை கவனத்தில் கொண்டு, இருதரப்பு ஆதரவாளர்களும் நடக்க வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நம் யாவருக்கும் உண்மையை, உண்மையாக அறிய உதவி செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross