வளமான காயலுக்கு - மாற்றம் ஒன்றே மாறாதது !! posted bySalai.Mohamed Mohideen (USA)[03 July 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19814
பினாமி கட்டுரைகளில் தொடங்கி ஊழல் அன்பர்களின் ஆடியோ தன்னிலை அறிக்கைகள் மற்றும் வெளிநடப்பு என்று கடந்த மூன்று வாரங்களாக நமதூர் இணைய தளங்கள் அல்லோல பட்டு விட்டது. பல கருத்துக்களை படித்ததில் இதுவரை நாம் கேள்வி கேட்காத சமுதாயமாகவே வாழ்ந்திருக்கிறோம் என்பதனை உணர முடிந்தது மற்றுமன்றி அதற்க்காக வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இணைய தளத்திட்க்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். கேள்வி கேட்க தெரியாத (விழிப்புணர்வற்ற) எந்த ஒரு சமுதாயமும் முன்னேறியதாக வரலாறு இல்லை.
நமது மக்கள் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என்பதனை 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' நம்மால் அறிய முடிகின்றது. நமதூர் இன்னும் (எண்ணிக்கையில்) அதிகம் படித்த அறிவார்ந்த சிந்திக்கும் சமுதாயமாக மாறும்போது இதன் வீரியத்தன்மை (மாற்றங்கள்) இன்னும் அதிகமாகும். அதற்க்கான ஆரம்பமே இந்த விழிப்புணர்வு போராட்டங்கள். இதனை நகராட்சி விசயத்தில் மட்டுமல்லாது மற்ற (உதாரணத்துக்கு CFFC /DCW, ஹெல்த் / கான்சர் சர்வே (விசயங்களிலும் காணலாம்.
ஒரே ஒரு ஆதங்கம், இந்த இணைய தளங்களின் வாயிலாக இன்று ஏற்பட்ட இந்த விழிப்புணர்வு நமது முன்னாள் நகரமன்ற தலைவர் அவர்களின் தலைமை காலத்திலேயே ஏற்பட்டிருந்தால்... முன்னாள் தலைவரின் கரங்களையும் மக்களின் சக்தியால் வலுப்படுத்தி ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தன் பதவி காலத்தில் அவர் அடைந்த மன உளைச்சளையும் தன் சொந்த பணத்தை ஊழல் பேர்வழிகளுக்கு வீண் விரயம் செய்ததையும் தவிர்த்திருக்கலாம். நமதூரும் முன்னேற்ற பாதையில் சென்றிருக்கும். ஊழல் பேர்வழிகளுக்கு (எண்ணம் கொண்டவர்களுக்கு) அன்றே சாவு மணி அடிக்க பட்டிருக்கும்.
இன்று நகர்மன்ற பதவி என்றால்... ஏதோ ‘பணம் காய்க்கும் மரம்’ என்ற மாயை ஒழிந்திருக்கும். நல்லவர்களும் வல்லவர்களும் அப்பதவிக்கு வந்து உண்மையாக உழைத்திருப்பார்கள். லஞ்ச எண்ணத்துடன் பணிக்கு வரும் அலுவலர்களும் மாறியிருப்பார்கள்.
இன்றைய இந்த இழிநிலைக்கு முதற் காரணம், இறைவன் மீது சத்தியமிட்டுவிட்டு லஞ்சத்துக்கும் அன்பளிப்புகளுக்கும் விலை போகும் கேவலமான/ பலகீனமான நிலையில் இன்றைய நம் சமுதாயத்தினர்கள் / மக்கள் பிரதி நிதிகள். ஒரு சாதாரண கவுன்சிலர் பதிவியிலேயே ‘ஈமான்’ பறிபோகும் அவல நிலையென்றால் மேற்கொண்டு அரசியல் உயர்வு பதவிகளை எண்ணி பார்க்க முடியவில்லை. இருப்பினும் நாம் நினைத்தால் மக்கள் சக்தி (ஒற்றுமை) என்ற பேரலையை கொண்டு ‘மாற்றத்தை சமுதாய முன்னேற்றத்தை’ கொண்டுவர முடியும். முயன்றால் முடியாதது ஒன்று மில்லை!!
இவைக்கான முதல் மாற்றமே ‘மக்களிடமிருந்து’ தான் வர வேண்டும். பேரவை பெரியவர்களே தேர்தல் முடிவுகளை மறந்து ஊர் நலன் நாடி நமது நகர்மன்றத்துடன் இணைந்து பணியாற்ற தொடங்கி விட்டார்கள். ஆனால் இன்று வரை, நாம் ஆதரித்தவர் / பேரவை வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்க பட்டு விட்டாரே அல்லது பெரியவர்களை தன்னார்வ இயக்கங்கள் அவமானபடுத்தி விட்டார்களே என்ற எண்ணத்தில் / வருத்தத்தில்… ‘வெற்றி பெற்றவர்’ ஊருக்கு எது செய்தாலும் குறைகூறி (Fault finding machine) ஆக மாறி நிகழ்காலத்தை கசப்பாக்கியும் எதிர்காலத்தை இருட்டாக்கியும் வருகின்றோம்.
ஒரு சிலர் தலைவியின் செயல்பாட்டில் ‘திருப்தி’ அடைந்திருந்தாலும் பேரவை மேல் உள்ள அலாதி பிரியத்தால் மெகா- வை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் நகர்மன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்து குளிர் காய நினைப்பதும் இன்னும் சிலர் வணக்க வழிபாடுகளில் இருக்க வேண்டிய மார்க்க கொள்கையை இதனோடு (நகராட்சி விசயத்தில்) போட்டு குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலுகின்றோம்.
அதே நேரத்தில் தலைவியின் மீதுள்ள அலாதி நம்பிக்கையில் செயல்பாட்டு திருப்தியில்.. தலைவியின் சில நிர்வாக கவனக்குறைவுகள், கறைபடியாத உறுப்பினர்களுடன் ஏற்படும் புரிந்துணர்தலில் (misunderstanding) ஏற்படும் கோளாறுகளை களைய /சரி செய்ய முயற்சி செய்யணுமே தவிர அதனை ஊதி பெருக்குவதில், சம்பந்த பட்டவர்களை வெறுப்பேற்றுவதில், கருத்து ( சரியோ தவறோ) யுத்தம் புரிவதில் எவ்வித லாபமும் இல்லை.
மிச்ச மீதியிருக்கும் ஒன்றிரண்டு நல்ல உறுப்பினர்களை & மேற்கூறிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தங்கள் பக்கம் இழுத்து தங்களுக்கென ‘தனி இணையதள’ கூடாரத்தை (இணையதள பாப்புலாரிட்டி) அமைத்து நினைத்ததை சாதிப்பதட்க்கு கழுகு/ ஜால்ரா கூட்டங்கள் வழிகெடுத்து கொண்டிருக்கிறது.
இவர்கள் ஒரு காலத்தில் பேரவையை உசுப்பேற்றி அவர்களின் முதுகில் ஓசி சவாரி செய்தார்கள். இப்பொழுது
உறுப்பினர்களையும் தலைவியையும் உசுப்பேற்றி பொது மக்களை திசை திருப்பி அது போன்ற சவாரிக்கு நம்மை பலிகடா ஆக்க பார்கின்றார்கள். அவர்களை பொறுத்த வரைக்கும் இது பொழுது போக்கு (Just for fun ).. ஆனால் நமக்கு?
கடந்த நகர்மன்ற உறுப்பினர்கள் (ஒரு சிலரை தவிர) செய்த அதே தவறை நீங்களும் (பெண்களும் இதற்க்கு விதி விலக்கல்ல?) செய்யாதீர்கள். உங்கள் வார்ட் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள். செல்வந்தர்கள் தரும் அன்பளிப்புகளை விட வல்ல இறைவன் உங்களுக்கு தரும் வெகுமதி… இம்மையிலும் மறுமையிலும் மிக சிறந்தது.
'லஞ்சமும் அன்பளிப்புகளும்' தான் உங்களின் பணத்தேவைகளை போக்குமென்றால் நீங்கள் வகிக்கும் பதவியை விட்டு விலகி அதற்க்கேன (ஆயிரத்தெட்டு?) வழிகளை பார்த்து கொள்ளுங்கள் அல்லது வார்ட் மக்களிடம் உங்கள் பணத் தேவையை கூறி உதவியை (இனாமாகவோ / கடனாகவோ) பெற்று கொள்ளுங்கள்.
அது யாரோ ஒரு செல்வந்தர்களிடம் உங்கள் சுய கவுரவத்தை அடகு வைத்து கும்பிடு போடுவதையும், நம்பி ஒட்டு போட்ட ஊர் மக்களுக்கு (& ரஹ்மானுக்கு செய்த சத்தியத்திட்க்கு) செய்யும் துரோகத்தையும் விட சாலச்சிறந்தது. காலம் ஒன்று கடந்து விட வில்லை. சிந்தியுங்கள் !!
இன்னும் இவைகளை காட்டு தீ போல ஊதி பெருக்க சிலர் முயல்வதட்க்குள் ‘ஈகோ’ மற்றும் கருத்து வேறுபாடுகளை களைந்து லஞ்சம் மற்றும் அன்பளிப்புகளை துறந்து நகர்மன்றத்தினர் ஒன்றிணைய வேண்டும். இதில் சமரசம் அடைவதே சாலச் சிறந்தது.
நன்மையை மட்டும் குறிக்கோளாக கொண்டு நமது விழிப்புணர்வு அமையுமானால், நமதூரை நிச்சயம் இறைவனின் துணை கொண்டு ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இயலும்.
நமதூர் வளம் பெற்றால் நாளை நம் சந்ததியினரும் தலை சிறந்து விளங்குவார்கள் என்பதனையும் மனதில் கொண்டு அதற்கான ஒரு கூட்டு முயற்சியை எடுப்போம் !! வல்ல ரஹ்மான் அதற்க்கு அருள் புரிவானாக !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross