செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 16 பேர் “ஆலிம் மஹ்ழரீ” பட்டமும், பார்வையற்ற ஒரு மாணவர் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்ட... posted bymackie noohuthambi (colombo)[10 July 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19926
பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மண்ணின் மைந்தர்கள் எங்கே? உள்ளூர் மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை ஊகிக்க முடிய வில்லையே?
காயல்பட்டினம் பத்வாக்கள் உலகெங்கும் கோலோச்சிய காலங்கள், இஸ்லாமிய சரித்திரத்தில் தடம்பதித்த நம் உலமாக்கள் அவர்களின் சிந்தனைகளில் ஏற்பட்ட இறை அச்சம் நபிகளின் மீது பாசம் இவைகள் அருகிவிட்டதன் விளைவுகளா இவை? இப்போதுள்ள உலமாக்கள் அல்லாஹ்வின் கட்டளை திருமறை. கண்மணி நாயகம் அவர்களின் வழிமுறை இவை இரண்டையும் தங்கள் வாழ்வியலாக கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை நமது இளைஞர்களின் மத்தியில் எடுத்துரைக்க தவறி விட்டார்களா என்று எண்ணத்தோன்றுகிறது
சதக்கத்துல்லாஹ் அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி, செத்தும் கொடைகொடுத்த சீதக்காதி வள்ளலை வாரி வழங்கிய வள்ளல் பூமி, அரபுதமிழை அகிலத்துக்கு அளித்த அற்புத பூமி, ஏன் இப்படி மாறி விட்டது. உலமாக்கள் குர் ஆன் ஹதீத் வழிகளை தவிர வேறு வழிகளில் ஈருலக வாழ்கையின் வெற்றி இருப்பதாக ஒரு தவறான சிந்தனை ஓட்டத்தை நம் இளைஞர்கள் மத்தியில் பரப்பிவருகிறார்களா, இதனால் இளைஞர்கள் நமது மதரசாக்களை விட்டு வேறு பாதை செல்கிறார்களா, உலக கல்வியும் மார்க்க கல்வியும் ஒன்றாக போதிக்க நாம் வியூகம் வகுக்க தவறிவிட்டோமா எங்கே தவறு நடக்கிறது, சிந்தியுங்கள்
எனது அருமை உலமாக்களே, நபிமார்களின் வாரிசுகளே........மீண்டும் காயல்பட்டினம் ஆன்மீகத்தின் விலை நிலமாக மாறவேண்டும். இதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். சுபுஹானாக லா இலம லெனா இல்லா மா அல்லம்தனா..இன்னக அன்தல் அலீமுல் ஹகீம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross