செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 16 பேர் “ஆலிம் மஹ்ழரீ” பட்டமும், பார்வையற்ற ஒரு மாணவர் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
السلام عليكم பட்டம் பெற்ற ஆலிம்கள், ஹாபில் ஆகியோர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் கல்வியறிவை பெருக்கி,கற்றபிரகாரம் செயல்படவும், சமுதாய மக்கள் பயன்பெற கற்றுக்கொடுக்கவும்,
அல்லாஹ் அருள்புரிவானாக!
சந்தோசமான இந்த செய்தியை பார்க்கும் அதே நேரத்தில் உள்ளூரிலே எந்த ஆலிமும் ,இதில் இடம்பெறவில்லையே என மனம் வேதனை படுகிறது.
சமுதாயத்தில் நமது உலமாக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை, அந்தஸ்து, மார்க்க சேவை ஆற்றும் அவர்களின் குடும்பங்கள் , அவர்களின் அணைத்து தேவைகளை பூர்த்தி செய்ய இச்சமூகம் பிற்போக்காக இருப்பதும் ,இந்த நிலைக்கு ஒரு காரணமாகும்.
உலகக்கல்விக்கு முக்கியத்துவம் ,உதவி, ஒத்தாசை, அனுசரணை வழங்கும் இச்சமூகம் "உலமாக்களை " உருவாக்கும் விசயத்தில் ஒரு ஜீரோவாகவே ஆகி விடுகிறது. இதில் விதிவிலக்காக இருப்பவர்கள் உண்டு. இங்கு அவர்களை குறிப்பிடவில்லை.
பொதுவான நோக்கில் சிந்திக்கும் போது இது உண்மை என்றே புலப்படும்.
எனவே ! இந்த துறைக்கு வருபவர்கள் இதுபோன்ற காரணங்களை எல்லாம் சிந்தித்து அதனால் அதில் இருந்து ஒதுங்குவது ஒருபுறம் .செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை இந்த துறைக்கு ஒதுக்குவது இல்லை என்பது மறுபுறம்.
ஓர் ஆலிம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று இருந்தால்தான் அவரால் துணிவாக சட்டதிட்டங்களை ,மார்க்க விசயங்களை தைரியமாக ,தெளிவாக தெரிவிக்கமுடியும்.
இதனை ஒன்று அவரின் பொருளாதார தேவைகளை சமூகம் நின்று, பொறுப்பேற்று கவனிக்கவேண்டும். அல்லது செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை ஆலிமாக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்பதே இன்றைய நிலைமை!
அதேநேரத்தில் சமூக சேவை, மார்க்க சேவை செய்வதில் (பிறரை) பிறவற்றை எதிர்பார்க்காமல் தூய எண்ணத்துடன் மார்க்கப்பணி ஆற்றிடும் உலமாக்களும் உண்டு ! அவர்களால்தான் மார்க்கட்சேவைகள் இந்த மட்டிலுமாவது நடைபெற்று வருகிறது.
இவர்களை உருவாக்கி வரும் இக்கலாட்சாலையின் முதல்வர், ஏனைய ஆசிரியர்கள், நிர்வாகிகள் ,இவர்களுக்கு பலமாகவும், பாலமாகவும், பணமாகவும் உதவி செய்பவர்கள் அனைவருக்கும் நீன்ற ஆயுளையும், நிறைவற்ற செல்வதையும், ஈருலக சகல நற்பாக்கியங்களையும் நாயன் நிறைவாக வழங்குவானாக !
"இறுதி நாளின் அடையாளங்களில் முதல்முதலாக "மார்க்க கல்வி " குறைந்துவிடும்(புகாரி ) என்ற நபிகள் கோமான் (ஸல்) அவர்களின் மணிமொழிகள் நிதர்சனமாக நடைபெற்று வருகிறது.
எல்லாம் வல்ல இறைவன் இக்குறையை நீக்கி, நல்ல ஆலிம்கள், உருவாகுவதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross