செய்தி: “ஊழலற்ற காயலை நோக்கி” கருத்தரங்க நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நிகழ்ச்சி என்னவோ வரவேற்கத்தக்கதுதான் . ஆனால் இதில் புதுமை எந்த உரையிலாவது உள்ளதா என்று யாராவது சொல்லமுடியுமா ?
A .Nafees Ahmed அவர்கள் உரையில் பெரும்பாலானவை நமது முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு . கிருத்துவராஜ் அவர்கள் ஒரு நிகழ்வின்போது சொன்னது . லஞ்சம் கொடுக்காதீர்கள் . எந்தவொரு வேலைக்கும் குறிப்பிட்ட காலம் காத்திருங்கள் . வேலை தானாக நடக்கும் என்று சொன்னார் . அதையேதான் இவரும் சொல்லியிருக்கிறார் . திரு . கிருத்துவராஜ் அவர்கள் சொல்லி இன்றுவரை கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது . இந்த இடைப்பட்ட காலத்தில் யாராவது எதற்காகவேனும் லஞ்சமாக கொடுத்தோ , வாங்கியோ இல்லையா ? இந்த கூட்டத்திற்கு வந்தவர்களில் எவரேனும் திரு .கிருத்துவராஜ் அவர்களின் அறிவுரையை கடைப்பிடித்தார்களா ?
அடுத்து , திரு .S , M . அரசு அவர்கள் உரை , கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் , இதெல்லாம் காலம் காலமாக பலரும் சொன்னதுதான் . பத்திரிக்கைகளில் படித்ததுதான் .
இந்த கூட்டம் நடத்தியதில் தவறே இல்லை . ஆனால் ஒருவர் உரையிலும் புதுமை இல்லை .
இந்த கூட்டம் மூலம் சிலருக்கு ஆப்பு , சங்கு என்றெல்லாம் கருத்துக்கள் எழுதினார்கள் . ஆனால் கண்ணியம் மிக்க இந்த பேச்சாளர்கள் குறிப்பிட்ட எவரையும் சாடாமல் , கண்ணியமாக பேசியிருப்பது பாராட்டிற்குரியது . இந்த பேச்சாளர்கள் , ஆப்பு , சங்கு என்று எழுதியவர்களின் எண்ணங்களுக்கு ஆப்பு , சங்கு வைத்து விட்டார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross