பர்தாவை காயலின் தனி கலாச்சாரம் என பேசும்.......... posted bySK Shameemul Islam (Chennai)[23 July 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20141
மீடியா என்பது நம் நாட்டின் அரசியல் சாசன அஸ்திவாரத்தின் 4 தூண்களில் ஒன்று. காற்று, நீர் புகாத இடங்களில் கூட மீடியா ஊடுருவிச் செல்லும். முழு அரசியல் பாதுகாப்பும் அங்கீகாரமும் மீடியாக்களுக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இருக்கும் மதிப்பு அளவு மீடியாவுக்கும் மதிப்புண்டு.
அரசியல் சாசனம் தெரியாதவர்கள் அரசியல் செய்வது ஒரு ஜனநாயக கேலிக்கூத்து.
பாவம், கொஞ்சம் நஞ்சம் அறிவுள்ளதாக எண்ணியிருந்த மக்களின் உள்ளத்தில் ஏமாற்றத்தை விதைத்து நம் பெருவாரியான கவுன்சிலர்கள் மீடியாவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளார்கள்.
இதில் இன்னொரு கேலிக்கூத்து திருவாளர் சுகு அவர்கள் சொன்னது.
பர்தாவை காயலின் தனி கலாச்சாரம் என பேசும் அளவு அதைக்காத்து வருபவரா நீங்கள். முஸ்லிம் பெண்களின் மேல் திடீரென இவ்வளவு அக்கறைகொள்ள காரணம் என்ன.
சென்னையில் கோடானு கோடிப் பெண்கள் வசித்துக்கொண்டிருக்க பர்தா அணியாத காயல் முஸ்லிம்களைப் பார்க்க தேடி அழைந்தார் போலும். எங்கள் குடும்பங்களும் சென்னையில் தான் வசிக்கிறது ஐய்யா. நீங்கள் சொல்வது போல அப்படி ஒன்றும் பர்தா அணியாமல் இங்கு யாரும் வெளியில் செல்வது இல்லை.
அது சரி ஒரு நல்ல கலாச்சாரமாக இதை நீர் ஏற்றுக்கொண்டால் முஸ்லிம் அல்லாத பிற பெண்களிடமும் அதைக்கொண்டு வர முயற்சி செய்யுங்களேன். நீங்கள் ஓநாய் அல்ல என்பதை மக்கள் அதன்மூலம் விளங்கிக்கொள்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross