யா அல்லாஹ் எங்கள் ஊரை காப்பாற்றுவாயாக! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[23 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20142
தலைவி அவர்கள் நகராட்சியில் ஒன்று சொல்கிறார்,வெளியில் ஒன்று சொல்கிறார் முன்னுக்குப்பின் முரணான தகவல் தந்து, தான்குற்றமற்றவர் போல் நடிக்கிறார் என்பது போன்ற குற்றசாட்டு, ஒரு இணயதளத்தில் சுகுவின் உரை சுகமாக இருக்கிறது,மற்றுமொரு இணயதளத்தில் சுகுவின் பேச்சு,நம்மையெல்லாம் புடவை உடுத்தி கொள்ளச்செய்யும் பேடிகளை பார்த்து பேசும் பேச்சுபோல் பதிவாகியுள்ளது.
எது உண்மை? வீடியோ கிளிப்பை வெட்டையில்தூக்கி போட்டால் வாய் திறக்க வழியில்லாமல் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இந்த வெளிச்சத்தை கண்டு ஏன் வெரண்டு ஓடுகிறார்கள்,
மடியில் கனமற்றோர் முன்னுக்கு வரவேண்டியதுதானே,ஏன் வீண் முரண்டு பிடிக்க வேண்டும்.முழுசாயமும் கரைந்து முச்சந்திக்கு வந்து விடுவோமோ என்ற வெடவெடப்போ ?
சரி,சிலரின் வாதப்படி வீடியோ கிளிப்பை அனுமதிக்காவிட்டால் இப்போதுள்ள மொபைலில் (அலைபேசியில்) பலமணி நேரம் ஓடும் வீடியோ வசதி உண்டல்லவோ,அதை எந்த ஒரு உறுப்பினரோ கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்?
சரி,மொபைல் அனைத்தையும் தடை செய்து விடலாம்,பேனாவில் கூட வீடியோ வருகிறதே,
சரி பேனாவையும் தடை செய்யலாம்,சட்டை பட்டனில் கூட வீடியோ வசதி வந்து விட்டதே,சரி சட்டையையும் கழற்ற சொல்லலாம், பெல்டில் கூட வீடியோ வசதி வந்து விட்ட செயதியையும் நம்மில் பலரும் அறிந்ததே,சரி பெல்டையும் கழற்ற சொல்லலாம்,....அய்யோ, ஐயையோ அது முடியாது பெல்டில்லாமல் என் வேஷ்டி நிற்காது,சரி வேஷ்டியையும்...........என்ன அன்பு வாசகர்களே அடுத்து வரிகளுக்காக வாய் பிளந்து நிற்கிறீர்களா?வெட்ககேடுங்க?
ஒரு நீதியான ,நேர்மையான,நன்மைதரக்கூடியநகராட்சி வேண்டும் என்று தேர்தல் காலத்தில் களைப்பையும், கண்ணுரக்கதையும் பாராமல் களப்பணியாற்றியத்தின் பலன் இதுதானா?
நகராட்சியை நரக ஆட்சியாக ஆக்க துடிப்பவர்களின் துள்ளலகளைஎல்லாம் தனியோனாம் இறையோன் பார்த்து கொண்டுதான் இருக்கிறான்.
யா அல்லாஹ் இந்த எமகாத பாதகர்களிடமிருந்து எங்கள் ஊரை காப்பாற்றுவாயாக!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross