Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[30 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 20441
"ஒரு வழிப்பாதை பற்றிய உண்மை விளக்கம்"
நம் காயல் நகரில் சமீப கால சலசலப்புகுள்ளான தலைப்பு செய்தி ஒரு வழிபாதை பற்றியதாகும் . அது முக்கிய தேவையா? இல்லையா? என்பதை விட்டு,விட்டு
இரு ஜமாதார்களுக்கிடையே கருத்து வேறுபாடாமே, குறிப்பிட்ட ஜாமத்தை குதறி எடுகிறார்கலாமே? என்று உண்மைக்கு மாற்றமாய்,கற்பனை கலந்து கனலாக்கி, நெருப்பாக்கி அதில் குளிர் காய நினைக்கும் சில நேர சந்தோஷ சிந்தனையாளர்களை,
சென்னையில் நேரடியாகவும்,மேலும் சிலரை இணையத்தளத்தில் கமென்ட் மற்றும் தலையங்கம் மூலமாகவும் தங்கள் கரிசனங்களை கொட்டி கொண்டிருப்பதையும் பார்க்க நேரிட்டது.
இப்படிப்பட்ட சிந்தனையாளர்களுக்கும், நம் காயல்பதி நடுநிலையாளர்களுக்கும்,உண்மைநிலையை விளக்க வேண்டும் என்ற முடிவில் எழுத தொடங்கி உள்ளேன் இன்ஷா அல்லாஹ்
ஒருவழி பாதையை வலியுறுத்தும் முகமாக தாயும் பள்ளி ஜமாஅத் அணைத்து ஜமாஅதார்களிடமும், அணைத்து அரசியல் கட்சிகள்,சங்கங்கள் ஆகியவற்றின் கையெழுத்துகளை பெற்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தது தவறான முன் உதாரணம் என்று நேரிலும் இணையதளத்திலும் கருத்து தெருவிக்கபட்டது.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கூலக்கடை பஜார்,பெரிய நெசவு தெரு பெயரை குறித்திருக்க கூடாது என்பது தான்.
பல ஆண்டுகாலமாகவே, போக்குவரத்திற்கு பொருத்தமான வழியென்று எல்லா அதிகாரிகளும்,ஒட்டு மொத்த ஊர் மக்களும் விரும்பிய எண்ணத்தை ஊர்மக்கள் சார்பாக ஒரு ஜமாஅத் தெருவித்தது மோசமான முன் உதாரணமா?
எங்கள் தெரு வழியாக பேருந்து போவதற்கு எதர்ப்பு தெரிவிக்கிறோம் என்று மட்டும் தீர்மானம் போட்டதோடு நிற்காமல்,
KTM தெரு.,மெயின் பஜார் HAT தெருவில் ஆக்கிரமிப்பு இருக்கிறது,அதை அகற்றிவிட்டு,இடித்துவிட்டு போக்குவரத்தை விரிவுபடுத்துங்கள் என்று உண்மைக்கு மாறான ஒரு புகாரை ஒரு குறிப்பிட்ட தெருவை சுட்டிக்காட்டி முதன் முதலில் தீர்மானம் போட்ட பெரிய நெசவு ஜமாத்தின் மேற்கோள் மோசமான முன் உதாரணமில்லையா?
இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் ஒருவழிப்பாதை வேண்டும் என்று KTM தெரு வாசிகள் முயன்று வந்தது இந்த ஊருக்கு தெரியுயும், அந்த கோரிக்கையில் ஒரு வரியில் கூட பெரிய நெசவு தெருவை பற்றி சொல்லி இருப்பார்களா? அந்த அளவிற்கு கண்ணியம் காத்த தெரு KTM தெரு..
ஆரம்ப காலத்தில் KTM தெருவும் பெ.நெசவு தெருவைப்போல் விசாலமாகதான் இருந்தது நாளடைவில் ஆக்கரமிப்பால் சுருங்கிவிட்டது என்று கூறும் பெ.நெசவு ஜமாஅதார்களே,
உங்களிடம் அதற்குரிய ஆதாரம் இருந்தால் கொண்டுவாருங்கள்,அது உண்மையாக இருந்தால் உங்கள் கண் முன்னாலேயே KTM தெரு வீட்டை இடிக்கிறோம்.
ஒருவேளை நீங்கள் நிரூபிக்க முடியாவிட்டால்,
நீங்களே முன் வந்து எங்கள் தெருவழியாக போக்குவரத்து போகலாம் என்று ஒப்புகொள்வீர்களா?
நகராட்சியில் ஒருவழிப்பாதை கொண்டுவர உரிமை இல்லாவிட்டாலும்,ஊர்மக்களின் ஒட்டுமொத்த விருப்பமான வசதியான,வழியை பரிந்துரைப்பதில் தவறு இல்லை.
நகராட்சியின் கமிஷனர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி ஒருவழி பாதைக்கு உகந்தது பெ.நெசவுதெரு வழி தான் என்று பருந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுத்திருக்கும் பொழுது,
ஊர்மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பிகிணங்க ஊர் தலைவி அவர்கள் ஊர்ஜமதார்கள் வழியை எற்றுகொண்டவராக பரிந்துரை சம்மத கையப்பொமிடுவதில் என்ன தயக்கமோ?
சுனாமி வீடு பிரச்னையில் ஊர் ஜமாஅத் நிலைதான் என் நிலை என்று கூறிய அதே தலைவி அவர்கள் இன்று ஊர் ஜமாத்தோடு ஒத்துபோக தயக்கம் காட்டுவதின் பின்னணிதான் என்ன?
தயவுசெய்து உண்மைக்காகவும் ஊருக்காகவும் ஒத்துபோகவும். அதுதான் நடுநிலைமைக்கு நல்லது. .
"இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது".
என்று ஒரு சகோதரர் இணயதளத்தில் கருத்து கூறியிருக்கிறார் . அவர் அப்படி கூறியருப்பதுதான் விந்தையாக இருக்கிறது.
நகரமன்ற பொறுப்பு இல்லை என்பதால் ஊருக்கு அவசிய தேவையை பருந்துரைப்பது குற்றமா? அது வேடிக்கையா?
நகரமன்ற உறுப்பினர்களை ஜமாத்துதான் தேர்ந்தெடுகிறது,அந்த ஜமாத்தே ஒப்புதல் கடிதமும் முத்திரையும் கொடுக்கும் பொழுது, அந்த வார்டு உறுப்பினர் கையெழுத்து இடுவது வேடிக்கையா?
நகராட்சியின் துணை தலைவர் அவர்கள்
இல்லாத பாதையை மேற்கோள் காட்டி அதை
ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தி தீர்மானம் போடுங்கள் என்று நகராட்சியில் வற்புறுத்தியதாக கேள்வி..
மனசாட்சி இல்லாமல் சொந்த ஜமாஅத், ஊர்ஜமாஅத் மக்களுக்கு எதிராக செயல்படும் அவரை ஆட்டிவைக்கும் பின்னணி சக்தி..
பலம் பொருந்திய சக்தி என்பதுமட்டும் தெரிகிறது.
{திமுக சார்பில் வெற்றிபெற்றதற்காக பெருமை பெற்ற கழக கட்சியாளர்களின் ஒருவனான நான், மேற்கண்ட செயலுக்காக இப்பொழுது வெட்கபடுகிறேன்.}
நெசவு தெரு கோமான் தெரு ஆகிவைகளை எந்த சம்பந்தமும் எடுக்காமல் ஒதிக்கியே வைக்கிறோம் என்பது மற்றுமொறு குற்றசாட்டு.
ஒரு கண்ணியமிகு காயல் சகோதரன் இப்படி சொல்வதற்கு தயங்குவான்.
இப்படி சொல்வது நாமாகவே அவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ள முயற்சிக்கும் செயல் என்று தான் சொல்வேன்.
ஏனெனில்,ஒட்டு மொத்த காயல் சகோதரர்களையும் அண்ணன்,தம்பிகளகதான் நேசிக்கிறோம்.
சம்பந்தம் என்பது அவரவர் எண்ணத்தாலும்,குணத்தாலும்,குளத்தாலும்,குடும்பத்தாலும் அமையக்கூடியது.
ஒரு வீட்டிலுள்ள சொந்த அண்ணன் தம்பி,ராத்தா,தங்கை குள்ளேயே சம்பந்தம் எடுக்க மறுக்கிறார்கள்.
இதில் வலியுறுத்தலோ ,வற்புறுத்தலோ, கட்டாயமோ கட்டுபடுத்தாது.
தயவு செய்து இருவேறு வாழ்க்கைமுறையை ஒப்பிட்டு பார்காதீர்கள்.அப்படி பார்க்கும் பொழுது சில நேரம் உயர்வு தாழ்வு என்ற கருத்து மேலோங்கி நிற்பதுபோல் தெரியும்,அதுவே உண்மையாகி விடாது.
எவரும்,எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல.எல்லோரும் நம் காயல்பதியின் உடன் பிறவா சகோதரர்களே!.
எல்லா தெரு சகோதரர்களும்,எல்லோர்களிடமும் ஒரு சில காரியங்களுடன் ஒன்று படாவிட்டாலும், பல காரியங்களில் பண்புடனும்,அன்புடனும் அரவணைத்து செல்கின்ற காட்சியைத்தான் காண முடிகிறது. அக் காட்சியை கொச்சையாக்கி விடாதீர்கள். தயவு செய்து.
இருஜமாத்தையும் ஒற்றுமையக்கிவிடுவேன் ரயில் ஏறி வந்து என்னை சந்தித்தால்,என்று ஊரின் முதுகெலும்புக்கொப்பான மரியாதைக்குரிய முக்கியஸ்தர் ஆதங்கபட்டதாக கேள்வி.
அவர்களின் ஆதங்கம் உண்மையாக இருந்தால்.உண்மைநிலைக்கேற்ப முடிவெடுங்களேன்.
அதற்குறிய எல்லா பலத்தையும் அல்லாஹ் உங்களுக்கு தந்துதனே இருக்கிறான்.
உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கம் எதுவாக இருந்தாலும் {அவ் விஷியதிர்க்குள் செல்ல விரும்பவில்லை} அந்த நோக்கத்தை சற்று நகர்த்திவிட்டு உள்ளங்கை நெல்லிக்கனியாய் உண்மை உங்கள் முன் நிற்கும் பொழுது,
உண்மைக்காகவும், ஊர்மக்களுக்காகவும், ஓரிறைவன் நம்மை உற்றுநோக்கி கொண்டே இருக்கிறான் என்ற இறை உணர்வுக்காகவும் உங்கள் இடத்தில் இருந்துகொண்டே ஒற்றுமையை நிலைநாட்டி ஊர்மக்கள் ஒட்டுமொத்த விருப்பத்தை நிறைவேற்றினால்,
உள்ளன்போடு ஊர்மக்கள் உங்களை நன்றியுடன் கண்ணியபடுத்துவார்கள்.
நான் இறுதியாக சொல்ல வருவது யாதெனில்.
தனி கவ்ரவமும்,தன்னலமும் ஒரு காலத்தில் பார்த்ததால் தான் நாம் ரயில்வே நிலையத்தை இழந்தோம். அக் கதை வேறு வடிவத்தில் தொடராவண்ணம்,
ஊர் மக்கள் நலனுக்காக,நாம் சிறிது தியாகம் செய்வோம் என்ற பரந்த எண்ணத்தில், எந்த கசப்பான காரியம் நடந்திருந்தாலும்அதை காயல்பதி மக்களுக்காக மறந்து விட்டோம்,.
நமதூர் நலனுக்காக எங்கள் தெருவை உபயோகித்து கொள்ளலாம் என்ற ஒப்புதலை தருகிறோம் என்கின்ற இனிய செய்திக்காக காயல் நகர மக்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவது பெரிய நெசவு ஜமாத்தார்களின் கையில் தான் இருக்கிறது.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross