Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byசாளை பஷீர் (?????????????,?????????????)[13 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 20520
அன்பு நண்பன் அப்துல் ஹமீதின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். அவரின் எழுத்தோட்டத்தில் எனக்கு மயக்கம் உண்டு.நவீனம் வெளி வரும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றேன்.
அவர் எழுத உத்தேசித்திருக்கும் வரலாற்று புதினம் தொடர்பாக எனது எண்ணவோட்டங்கள் சிலவற்றை முன் வைக்கலாம் என்றுள்ளேன்.
எப்படி வரலாற்றை , பூர்வீகத்தை மறந்த சமுதாயம் புதிய வரலாற்றைப்படைக்க முடியாதோ அதே போல் பூர்விகம் மீது எல்லை கடந்த பெருமை பாராட்டும் போக்கிலும் சில சிக்கல்கள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெருமை மிக்க நமது பூர்வீகத்தின் மீதும் உன்னதமான முன்னோர்கள் மீதுமான நமது நினைவுகள் போற்றத்தக்கவைதான்.
அந்த பழம்பெருமை நினைவுகள் நம்மை புதிய சாதனைகளைப்படைப்பதிலும், உன்னத சமுதாயத்தை உருவாக்குவதிலும் உதவும் வரை எவ்வித சிக்கலுமில்லை.
ஆனால் எந்த செயலூக்கமுமில்லாமல் நமது பாரம்பரியம் மீதான பெருமையை மட்டும் நாம் கொண்டாடுவது என்பது உயர் சாதி கர்வத்தை மட்டுமே உண்டாக்கும்.இன்று நமதூரின் சிக்கலும் இதுதான்.
நமதூரின் தலையாய நீரோட்டத்தில் சில தெருக்கள் ஒதுக்கப்படுவதும் இதன் அடிப்படையில்தான்.
எனவே நண்பர் அப்துல்ஹமீத் இந்த சிக்கலை மனதில் கொண்டு வரலாற்று நவீனத்தைப்படைப்பது நல்லது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross