Re:காயல் வாசிகளே, அனுபவத்தை ... posted byALS maama (Kayalpatnam)[27 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20664
இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
எனது கட்டுரை தொடரான " சாதனைய? சோதனையா?" எழுத்தோவிய மூன்று தொடரிலும் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 1169 பேர்கள், கருத்து எழுதியவர்கள் 0012 ஆனால் 1169 கணக்கின்படி குறைந்தது 160 பேராவது கருத்து பதிவுசெய்திருக்கலாம்.ஆனால் விரல்விட்டு என்னும் அளவி 12 பேர்கள் (ஒரு டசன்) வாகு எனக்கு கிடைத்திருக்கிறது நன்றி.
நான் இதற்காக எடுத்துக்கொண்டுள்ள சிரமங்கள், சந்தித்த பெரிய மனிதர்கள், வயதில் மூத்தவர்கள், என் வயது 65 ஐ விட அதிகமானவர்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் கண்ணியமானவர்கள், பொதுசேவையில் அதிக பங்கு செலுத்துபவர்கள். இவர்களை சந்திக்கும் பொது அவர்களின் வேலை பளு, சேவையில் ஈடுபட்டிருக்கும் பொது இடையுறு கொடுத்துவிடாமல் அவர்களை கண்காணித்து அவர்கள் கோவப்பட்டு விடாமலும் அதில் நான் எனக்குரிய நளினத்தை கடைப்பிடித்து இந்த கட்டுரை எழுத மிகுந்த சிரமமேடுத்திருக்கிறேன்.
இன்ஷா அல்லா, காயல் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுத 30 வருடங்களுக்கு முன் எழுத ஆசைப்பட்டேன், அதில் ஒருசில பகுதியை எனது மறைந்த ஆசான் அல் ஹாபில், அல் ஹாஜி SKM நூஹு தன்பி ஆலீம் ஜுமானி (முத்துச் சுடர் மாத இதழ் ஆசிரியர் ) அவர்களிடம் கற்றுக்கொண்ட எழுத்து துறையும், கவிதைக்கு SMB மஹ்மூது ஹுசைன் அவர்களிடமும் பல்வேறு பத்திரிகை துறை செய்திகளை அன்று 1960 முதல் அவர்கள் இல்லம் சென்று எல்லா பத்திரிகை விசயங்களையும் அங்கு நான் கற்று குறிப்பெடுத்து டைரியில் நான் பதிந்துள்ளேன்.
புத்தகம் படிப்பதும், அவற்றின் குறிப்புகளை எழுதுவதும் எனது அன்றாட வேலை ஆகும். YUF நூலகத்தில் எனது அன்புக்குரிய மற்றொரு ஆசான் மர்ஹூம் SK ஷாஹுல் ஹமீது அவர்கள் எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊட்டிய முதல் நபர் அதுவும் 1960 - 1961 இந்த காலகட்டத்தில் என்னை சிறந்த நூல்கள் படிக்க அடிக்கடி தூண்டிக்கொண்டே இருப்பார்கள். என்மீது ஒரு தனி பிரியமும், ஆர்வமும் கொண்டவர்கள்.
இதே மாதிரி தான் MYO நூலகம் செப்று பல்வேறு புத்தகங்களை படிப்பேன், அங்கு எனது அன்பு நெஞ்சங்களான ஜிப்ரி கரீம் அவர்கள், பாரூக் அவர்கள் ஆகியோர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்ப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் அறிவு ஜீவிகள், இவர்கள் மூலம் பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளின் கட்டுரை தொகுப்புகளை தமிழில் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நான் இக்கட்டுரை எழுதும்பொழுது நினைத்து பார்க்கின்றேன்.
முத்துச் சுடர் ஆசிரியர் அவர்கள், இதன் துணை ஆசிரியர் SSM ஷேக் அலி ஆலீம் அவர்கள் எனக்கு அவர்கள் பத்திரிகையில் 1976 முதல் 1998 வரை இஸ்லாமிய சிறுகதைகள், கட்டுரைகள், உண்மைசம்பவங்கள், உலக அதிசய துணுக்குகள்,பேட்டிக்கட்டுரைகள் இப்படி பல தலைப்புகளில் எழுத அன்று அவர்கள் உதவினார்கள் நானும் எழு புனைபெயர்களில் விசயங்களை எழுதி வந்தேன். அத்தனையும் இன்றுவரி என்னிடம் பத்திரமாக வைக்க அல்லாஹ் தாலா உதவி இருக்கின்றான்.
காயல்பட்டணத்தில் முதன்முதலில் என்ற தொடரில் 250 குறிப்புகள் எழுதி அது எழுத்தாளர் LS இப்ராஹீம் ஹாஜி அவர்களிடம் பராட்டப்பெற்றுள்ளேன். இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த எழுத்தோவியம் "காயல் தகவல் களஞ்சியம்" அகர வரிசையில் எழுத ஆசைபடுகின்றேன் உங்களுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் இணையதள நண்பர்கள் எனது e-mail முகவரியான alsarts@gmail.com ல் பதிவு செய்து அனுப்ப வேண்டுகிறேன்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross