வெட்கித் தலைகுனிய தோன்றுகிறது... posted byS.K.Salih (Kayalpatnam)[28 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20665
எனதன்பு ஏ.எல்.எஸ். மாமாவின் ஆதங்கம் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் நியாயமானதே! சுமார் 4 அல்லது 5 பத்திகள் கொண்ட ஒரு கட்டுரையைத் தொகுத்தளிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சில...
ஆதாரக் குறிப்புகளை நூலகங்களுக்குச் சென்றோ, நூற்கள் உள்ளவரிடம் சென்றோ நூற்களைப் பெற்று, அவற்றிலிருந்து தனது டைரியில் குறிப்பெடுத்து, அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து, தனக்கு தட்டச்சு செய்யத் தெரியாத காரணத்தால், பலரது உதவியுடன் (சில பல நேரங்களில் கைக்காசை செலவழித்து) தட்டச்சு செய்து தருகிறார்கள்...
நாற்காலியிலமர்ந்து, நினைத்ததை தட்டச்சு செய்து, நொடிப்பொழுதில் ஆக்கங்களை வெளியிடும் என் போன்றவர்களுக்கு ஏணி வைத்தாலும் எட்டாது ஏ.எல்.எஸ். மாமா போன்றவர்களின் உயரம்.
நம் இணையதளத்தில், பரபரப்பான செய்திகள், வித்தியாசமான தலைப்புகளில் செய்திகள் வருகையில், அவற்றில் பெரிய அளவில் தகவல்கள் இல்லையென்றாலும் கூட வாசகர் கருத்துக்கள் தூள் பறக்கும்போது, இதுபோன்ற நல்ல ஆக்கங்களுக்கு ஏன் வருவதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. செய்திகளில் கூட சில செய்திகளுக்கு வாசகர் கருத்துக்கள் அதிகளவில் வருவது நன்றாக இருக்குமே... என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது, அவற்றுக்கு வரும் கருத்துக்கள் ஒன்றோ, இரண்டோ அல்லது அதிகபட்சம் ஐந்தோ மட்டுமே!
இது யாருடைய குறை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை... சில அன்பர்கள் என்னை நேரில் சந்தித்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் அனுதினமும் செய்திகளையும், கட்டுரைகளையும் படித்து வரத்தான் செய்கிறோம்... ஆனால் கமெண்ட்ஸ் போட அச்சமாக உள்ளது... காரணம், யாராவது - ஏதாவது நம்மை கேலி செய்து எழுதிவிடுவார்களோ... என்பதுதான்!” - இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் இப்போதைக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்,
வழமையான கருத்தாளர்கள் இதுபோன்ற நல்ல ஆக்கங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தர இசைய வேண்டும்...
சில நேரங்களில் கரடு முரடாக கருத்தெழுதுவோர், (எல்லாவற்றையும் தணிக்கை செய்வது நன்றாக இருக்காது என்ற - இணையதள நிர்வாகத்தினரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு) இயன்றளவுக்கு தம் கருத்துக்களை நளினப்படுத்த வேண்டும்...
இவற்றைச் செய்தாலே பலர் தமது கருத்துக்களைத் தயக்கமின்றி தர வாய்ப்பேற்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross